பணத்தை ஆட்டையை போட்டு தயாரிப்பாளர்களை ஏமாற்றிய 5 நடிகர்கள்.. கேரியருக்கு ஆப்பு

Red Card for Tamil Actors: பல கோடிகளை கொட்டி ஒரு படத்தை படாத பாடுபட்டு எடுக்கக்கூடிய தயாரிப்பாளர்களிடம், சில நடிகர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு ஆட்டைய போட்டிருக்கின்றனர். அதிலும் குறிப்பிட்டு சொல்ல கூடிய இந்த 5 நடிகர்களும் தொடர்ந்து இந்த செயலை செய்து கொண்டிருப்பதால் இவர்களின் மீது ஏகப்பட்ட புகார்கள் குவிந்திருக்கிறது. அதன் காரணமாக சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் சங்க மீட்டிங்கில் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக இருக்கும் 5 பேருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்ற முடிவை உறுதியாக எடுத்திருக்கின்றனர். அந்த லிஸ்டில் இடம்பெற்றிருக்கும் நடிகர்களை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அதர்வா: நடிகர் முரளியின் மகனான அதர்வா அப்பாவின் பெயரை கெடுத்து விடும் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் சொந்த தயாரிப்பில் நடித்த ‘செம போத ஆகாதே’ என்ற படத்தை நடித்து ரிலீஸ் செய்தார். இந்த படத்தின் உரிமையை தயாரிப்பாளர் மதியழகன் என்பவருக்கு 5.5 கோடிக்கு கொடுத்திருக்கிறார். ஆனால் இந்த படம் தோல்வியை சந்தித்தது. இதற்கான நஷ்டத்தை சரி கட்ட, அதர்வா ஒரு படத்தில் நடித்து கொடுப்பதாக அவரிடம் இருந்து 50 லட்சத்தை அட்வான்ஸ் ஆக வாங்கி இருக்கிறார்.

ஆனால் படம் நடித்துக் கொடுக்காமல் இழுத்தடிப்பதால் தனக்கு 6 கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார். இது குறித்து விளக்கம் அளிக்குமாறு பலமுறை அதர்வாவிற்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை. இதனால் தயாரிப்பாளர் சங்கம் அவர் மீது செம கோபத்தில் இருக்கிறது. ஆனால் அதர்வா வளரும் போது இப்படி அவப்பெயரை பெற்றுக் கொள்வது அவருடைய கேரியருக்கு அவரே வைத்துக் கொள்ளும் ஆப்பு தான். இவருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக முடிவு எடுத்திருக்கிறது.

யோகி பாபு: மற்ற நடிகர்களுக்கெல்லாம் ஒரு சில தயாரிப்பாளர்கள் மட்டும்தான் புகார் அளித்திருக்கின்றனர். ஆனால் யோகி பாபுவின் மீது பல தயாரிப்பாளர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். பெரும்பாலான படங்களுக்கு இவர் முழு சம்பளத்தையும் வாங்கிக் கொண்டு படத்தை முடித்துவிட்டு டப்பிங் பேசுவதற்கு வருவதில்லையாம். வெளிநாடு சென்று விட்டதாக காரணமும் கூறுகிறார். இதனால் படங்களும் சரியான நேரத்தில் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப்போகிறது. இதனால் பெரிய நஷ்டத்தை சந்திப்பதாக பல தயாரிப்பாளர்கள் யோகி பாபுவின் மீது கொல காண்டில் இருக்கின்றனர். இவருக்கு கண்டிப்பாக ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்ற முடிவை தயாரிப்பாளர் சங்கம் எடுத்திருக்கிறது.

ரெடின் கிங்ஸ்லி: வித்தியாசமாக பேசுவதன் மூலம் நகைச்சுவை உணர்வை தூண்டக்கூடிய காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி, தற்போது டாப் நடிகர்களின் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் சிவகார்த்திகேயனின் டாக்டர், ரஜினியின் அண்ணாத்த, விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி, சிம்புவின் பத்து தல போன்ற படங்களில் இவர் அடித்த லூட்டி கொஞ்ச நஞ்சமல்ல. இப்படி வெகு சீக்கிரமே டாப் நடிகர்களின் படங்களில் வாய்ப்பு கிடைத்ததால் தற்போது ஓவர் திமிரு காட்டுகிறார்.

அதிலும் ‘லெக் பீஸ்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு முன்பணமும் பெற்றுக் கொண்ட பிறகு, படத்தில் நடிக்க மறுத்ததால் தற்போது தயாரிப்பாளர் மணிகண்டன் அவரை எவ்வளவோ சமாதானப்படுத்த பார்த்திருக்கிறார். அப்படியும் வழிக்கு வராததால், மணிகண்டன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இவர் மட்டுமல்ல இன்னும் ஒரு சில தயாரிப்பாளர்கள் இவர் மீது புகார் தெரிவித்திருக்கின்றனர். இவருடைய பெயரும் ரெட் கார்ட் கொடுக்க போகிற நடிகர்களின் லிஸ்டில் இடம் பெற்றுள்ளது.

ஜெயப்பிரகாஷ்: இவருடைய ‘காட் மேன்’ என்ற வெப் சீரிஸ் சமூக மற்றும் மதத்தை இழிவுபடுத்தக்கூடிய விதத்தில் இருந்ததால், சோசியல் மீடியாவில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. அதிலும் பிராமண சமூகத்தை மிகவும் கேவலமாக சித்தரித்த காட்சிகளில் ஜெயப்பிரகாஷ் சாமியார் வேடத்தில் நடித்தது மட்டுமல்லாமல் சர்ச்சைக்குரிய வசனங்களையும் பேசி அவப்பெயரை சம்பாதித்துக் கொண்டார். இதே போன்று நிறைய படங்களில் இவர் முன் பின் யோசிக்காமல் நடித்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு அடுத்தடுத்த படங்களில் இஷ்டத்திற்கு கமிட் ஆகி, கால் சீட் பிரச்சனையில் மாட்டிக் கொண்டார்.

இதன் காரணமாக இவரால் நிறைய படங்களின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. இதனால் தயாரிப்பாளர்களுக்கும் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டதாக பலரும் இவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கின்றனர். இது குறித்து இவருக்கு பலமுறை வார்னிங் கொடுத்தும் கேட்காத ஜெயப்பிரகாசுக்கு விரைவில் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றும் சமீபத்திய மீட்டிங்கில் தயாரிப்பாளர் சங்கம் அதிரடியாக முடிவெடுத்துள்ளது.

இவர்கள் மட்டுமல்லாமல் இதில் ஐந்தாவதாக முக்கியமான ஒரு முன்னணி நடிகர் பெயரும் இடம் பெற்றுள்ளது. அந்த லிஸ்ட் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் ஒவ்வொரு படங்களிலும் ஒப்பந்தமாகி பணத்தைப் பெற்றுக் கொண்டு நடிக்க மறுத்ததால் இவர்கள் மீது இந்த நடவடிக்கையை எடுக்கப் போகின்றனர்.