தளபதி 68-ல் ஐந்து நடிகர்களுக்கு மறு வாழ்வு கொடுத்த விஜய்.. வெங்கட் பிரபுவின் கை பக்குவம் வசூலை தருமா.?

Thalapathy 68: இப்போதெல்லாம் தமிழ் சினிமாவில் பழைய நடிகர்களை மீண்டும் ஏதாவது ஒரு ரோலில் தங்களுடைய படங்களில் நடிக்க வைப்பது ட்ரெண்ட் ஆகி வருகிறது. அந்த வரிசையில் தளபதி 68 படம் முழுக்க எவர்கிரீன் கூட்டமாக இருக்கிறது. தளபதி 68 படத்தின் மூலம் இந்த ஐந்து பிரபலங்கள் மீண்டும் தங்களுடைய சினிமா வாழ்க்கையை தொடங்க இருக்கிறார்கள்.

மீண்டும் என்ட்ரி கொடுக்கும் ஐந்து நடிகர்கள்

பிரசாந்த்: காதல் இளவரசனாக 90களில் ரசிகைகளை கொள்ளை கொண்டவர் டாப் ஸ்டார் பிரசாந்த். அஜித் மற்றும் விஜய் வளர்ந்து கொண்டிருக்கும் ஹீரோக்களாக இருக்கும் பொழுது இவர் முன்னணி ஹீரோவாக இருந்தார். இடைப்பட்ட காலத்தில் சில சொந்த சருக்கல்களால், பிரசாந்தால் சினிமாவில் வெற்றி பெற முடியாமல் போனது. தளபதி 68ல் இணைந்தது மூலம் அடுத்தடுத்து இவருக்கு நிறைய பட வாய்ப்புகள் வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

லைலா: அஜித், பிரசாந்த், பிரபுதேவா, முரளி போன்ற ஹீரோக்களுடன் கைகோர்த்த லைலா, விஜய் உடன் நடிக்காமல் போனது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய வருத்தமாக இருந்தது. அந்த குறையை போக்கும் வகையில் தளபதி 68 படத்தில் இருவரும் ஒரே திரையில் நடித்து நமக்கு ட்ரீட் கொடுக்க இருக்கிறார்கள். சர்தார் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த லைலா, தளபதி 68க்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read:அமீரிடம் கதை கேட்டு விட்டு தளபதி சொன்ன விஷயம்.. பல வருடம் கழித்து வெளிவந்த சீக்ரெட்

பிரபுதேவா: போக்கிரி படத்தில் ஒரு சின்ன காட்சியை பிரபுதேவா மற்றும் விஜய் இணைந்து ஆடியது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பிரபுதேவாவின் இயக்கத்தில் விஜய் நடித்திருந்தாலும், இதுதான் முதல்முறையாக இருவரும் இணைந்து நடிப்பது. சமீப காலங்களாக தமிழில் நல்ல படங்கள் இல்லாமல் இருக்கும் பிரபுதேவாவுக்கு தளபதி 68 நல்ல திருப்புமுனையாக அமைய வாய்ப்பு இருக்கிறது.

மைக் மோகன்: 90களில் காலகட்டத்தில் மைக்கை பிடித்து பாடி நடித்த படங்களை சூப்பர் ஹிட் ஆக்கியவர் மோகன். கமலுக்கு போட்டியாக சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த இவர், குறிப்பிட்ட காலகட்டத்தில் காணாமல் போய்விட்டார். தற்போது தளபதி 68 படத்தின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கிறார். இதன் பின்னர் நடிகர் மோகனை நிறைய வித்தியாசமான கேரக்டர்களில் எதிர்பார்க்கலாம்.

சினேகா: திருமணத்திற்கு பிறகு நடிகை சினேகா கிடைக்கும் பட வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தி நடித்து வருகிறார். பட்டாசு படத்திற்கு பிறகு சினேகாவை அவ்வளவாக தமிழ் சினிமாவில் பார்க்க முடியவில்லை. தற்போது தளபதி 68 படத்தில் நடிக்கிறார். வசீகரா படத்தில் விஜய் மற்றும் சினேகா கெமிஸ்ட்ரியை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது. மீண்டும் இவர் விஜய் படத்தில் இணைந்திருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கிறது.

இது மட்டும் இல்லாமல் சில வருடங்களாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்த ஆகாஷ், அஜய், அஜ்மல் போன்ற நடிகர்களும் தளபதி 68 படத்தில் இணைந்திருக்கிறார்கள்.

Also Read:விஜய் பட இயக்குனரா வேண்டவே வேண்டாம்.. அஜித் ரிஜெக்ட் செய்து, சூப்பர் ஹிட் அடித்த படம்