24 மணி நேரமும் தம் அடித்து உடம்பை கெடுத்துக் கொண்ட 5 இயக்குனர்கள்.. ரயில் வண்டியை போல் புகையை ஊதி தள்ளிய மிஸ்கின்

Smoking Directors: சினிமாவை பொறுத்தவரை படங்களின் மூலம் எந்த அளவுக்கு நல்ல விஷயங்களை மக்களிடம் கொண்டு போய் சேர்க்கிறார்களோ அதே அளவுக்கு பல கெட்டதுகளையும் கொண்டு வருகிறார்கள். இதில் அப்பட்டமாக பல படங்களில் காண்பிப்பது புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவது. இதனால் பல சர்ச்சைகள் வெடித்த நிலையில் அதற்கு தீர்வாக ஒரு டிஸ்க்ளைமர் அடியில் போட்டு விடுகிறார்கள்.

மேலும் இப்படிப்பட்ட படங்களை எடுப்பதை தவிர்த்தால் நன்றாக இருக்கும். ஆனால் அது அவர்களால் முடியாத காரியம். ஏனென்றால் படங்களை எடுக்கக்கூடிய இயக்குனர்கள் முழு நேரமும் இதைத்தான் செய்து வருகிறார்கள். அப்படி என்றால் அவர்கள் எடுக்கக்கூடிய படங்களிலும் இந்த மாதிரி சீன்கள் கொண்டு வருவது ஆச்சரியப்படுவது ஒன்றுமில்லை.

இப்படிப்பட்ட படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் சில இயக்குனர்கள் ரயில் வண்டியைப் போல் சிகரட்டை ஊதி தள்ளி கொண்டு படப்பிடிப்பு தளத்தில் உடம்பை கெடுக்கும் அளவிற்கு பயன்படுத்தி வருகிறார்கள். அப்படிப்பட்ட இயக்குனர்கள் யார் என்பதை பற்றி பார்க்கலாம்.

அந்த வகையில் படத்தை எதார்த்தமாக கொண்டு போவதற்காக நடிகர் நடிகைகளை படாத பாடு படுத்தி வரும் இயக்குனர் பாலா. இவர் முக்கால்வாசி டென்ஷனாக இருப்பதால் புகைப்பிடித்தால் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும் என்று தவறாக புரிந்து கொண்டு முழு நேரமும் இதைத்தான் கையில் சுற்றிக்கொண்டு வருவாராம்.

இதே போல தான் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிக்கிறோம் என்று தெரியாத அளவிற்கு கையில் இதை வைத்து கொண்டு தான் இருப்பாராம். அடுத்ததாக எல்லாத்தையும் மனதில் பட்டதை நேருக்கு நேர் வெளிப்படையாக பேசி வரும் இயக்குனர் மிஷ்கின். இவருக்கு இது இல்லை என்றால் எந்த வேலையும் ஓடாதாம். அந்தளவிற்கு அடிமையாகி இருக்கிறார்.

அடுத்ததாக இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகரான மனோபாலா, ஆரம்ப காலத்தில் எண்ணற்ற பாக்கெட்களை கையில் வைத்துக் கொண்டு இதுதான் சாப்பாடு போல நினைத்து கணக்கே இல்லாமல் தம் அடித்திருக்கிறார். இதற்கடுத்து நடிகர் மற்றும் இயக்குனரான ராஜ்கிரண் அவர்களும் இடைப்பட்ட காலத்தில் இவரின் டென்ஷனை குறைப்பதற்காக புகைபிடிப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். ஆனால் போகப் போக இவர்கள் அனைவருக்கும் இதனால் எந்த அளவுக்கு பாதிப்பாகும் என்பதை புரிந்து கொண்டு தற்போது குறைத்துக் கொண்டார்கள்.