1. Home
  2. கோலிவுட்

நான்கு வருடங்களுக்கு பிஸியாக இருக்கும் சிம்பு.. கைவசம் உள்ள 5 படங்கள்

நான்கு வருடங்களுக்கு பிஸியாக இருக்கும் சிம்பு.. கைவசம் உள்ள 5 படங்கள்

Simbu : சிம்புக்கு மாநாடு படத்திற்குப் பிறகு ஏறுமுகம் என்று தான் சொல்ல வேண்டும்.‌ அவர் நடிக்கும் படங்கள் எல்லாமே ஹிட் லிஸ்டில் இடம்பெறுகிறது. அந்த வகையில் இப்போது கமலுடன் இணைந்து தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கான பிரமோஷன் பயங்கரமாக நடந்து வரும் நிலையில் ஜூன் 5ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக இருக்கிறது. மேலும் சமீபத்தில் சந்தானத்தின் பட விழாவில் சிம்பு கலந்து கொண்டு பேசி இருந்தார். அதோடு பல வருடங்கள் பிறகு சந்தானத்துடனும் சிம்பு ஒரு படத்தில் இணைந்திருக்கிறார்.

அதாவது சிம்புவின் 49 வது படத்தை ராம்குமார் இயக்குகிறார். இந்த படத்தில் தான் சந்தானம் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி படத்திலும் சிம்பு கமிட் ஆகி இருக்கிறார்.

சிம்பு கைவசம் உள்ள 5 படங்கள்

இதைத்தொடர்ந்து ஓ மை கடவுளே, டிராகன் போன்ற படங்களை இயக்கி வெற்றி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். இந்தக் கூட்டணிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.

அடுத்ததாக லைக்கா மீண்டும் ஒன்பது படங்களை தயாரிக்க உள்ள நிலையில் அதில் ஒன்று மணிரத்தினம் மற்றும் சிம்பு கூட்டணி. மேலும் சூரரைப் போற்று இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார்.

இவ்வாறு சிம்பு கைவசம் ஐந்து படங்கள் உள்ள நிலையில் அந்த இயக்குனர்கள் பல ஹிட் படங்களை கொடுத்தவர்கள். ஆகையால் சிம்பு அடுத்த நான்கு வருடங்களுக்கு படப்பிடிப்பில் படு பிஸியாக இருக்க உள்ளார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.