This Week OTT Realease Movies: ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் பல படங்கள் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. இதில் சில படங்கள் திரையரங்கு வெளியீட்டுக்கு பின் ஓடிடியிலும், சில படங்கள் நேரடியாகவே ஓடிடி தளத்திலும் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் கடந்த மாதம் கடைசி நாளான ஜூன் 30-ம் தேதி ஓடிடியில் வெளியான 5 படங்களை இப்போது பார்க்கலாம்.
வீரன் : ஏஆர்கே சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, வினய் மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையில் வெளியான திரைப்படம் வீரன். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் நேற்று அமேசான் பிரைம் ஓடிடியில் இப்படம் வெளியானது.
குட் நைட் : விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் மணிகண்டன், ரமேஷ் திலக் மற்றும் பல பிரபலங்கள் நடிப்பில் நகைச்சுவையாக எடுக்கப்பட்ட படம் குட் நைட். திரையரங்குகளில் வெளியான படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகி இருக்கிறது.
குலசாமி : சரவணன் சக்தி இயக்கத்தில் விமல், தனியா ஹோப் மற்றும் பல நட்சத்திரங்கள் நடிப்பில் மே ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் குலசாமி. இந்த படத்திற்கு தியேட்டரில் பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. ஆகையால் நேற்றைய தினம் டென்ட் கொட்டா ஓடிடி தளத்தில் குலசாமி படம் வெளியாகி உள்ளது.
விமானம் : சிவ பிரசாத் யனலா இயக்கத்தில் சமுத்திரகனி, மாஸ்டர் துருவன் மற்றும் பலர் நடிப்பில் ஜூன் ஒன்பதாம் தேதி வெளியான திரைப்படம் விமானம். இந்நிலையில் குழந்தைகளின் ஆசைகளை நிறைவேற்றும் ஒரு தந்தையின் கதையாக விமானம் படம் எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.
லஸ்ட் ஸ்டோரிஸ் 2 : சுஜய் கோஷ் இயக்கத்தில் விஜய் வர்மா மற்றும் தமன்னா ஆகியோர் நடிப்பில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கும் படம் லஸ்ட் ஸ்டோரிஸ் 2. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான போதே பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் படம் நேற்று வெளியாகி இருக்கிறது. மேலும் தமன்னா இப்படத்தில் ஓவர் கவர்ச்சி காட்டியுள்ளார்.