1. Home
  2. கோலிவுட்

கதை தான் முக்கியம் என ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 5 படங்கள்.. யாரும் எதிர்பார்க்காத ரோலில் டிரைவர் ஜமுனா

கதை தான் முக்கியம் என ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 5 படங்கள்.. யாரும் எதிர்பார்க்காத ரோலில் டிரைவர் ஜமுனா

ஐஸ்வர்யா ராஜேஷ் தனது திறமையால் சினிமாவில் முன்னணி ஹீரோயின் என்ற இடத்தை பிடித்துள்ளார். பெரும்பாலும் இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக இருக்கும். சில நடிகைகள் தயங்கும் கதைகள் கூட ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.

காக்கா முட்டை : இளம் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்திருந்தார். மேக்கப் இல்லாமல் கூவத்தில் உள்ள பெண்ணாக நடித்து அசத்தி இருந்தார். இவர் இந்த கதையை ஏற்று நடித்ததற்காக பலரும் பாராட்டுகளை தெரிவித்து இருந்தனர்

கனா : தந்தையின் ஆசையால் கிரிக்கெட்டில் வெற்றி பெறப் போராடும் பெண்ணாக இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். விவசாயத்திற்கான முக்கியத்துவமும் இப்படத்தில் சொல்லப்பட்டிருந்தது. சத்யராஜ், ஐஸ்வர்யா இருவருமே இந்த படத்தில் அசத்து இருந்தனர்.

திட்டம் இரண்டு : விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் திட்டம் இரண்டு. இந்த படத்தில் துணிச்சலான போலீஸ் அதிகாரியாக ஆதிரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் ஐஸ்வர்யா ராஜேஷ் பெற்றார்.

க/பெ ரணசிங்கம் : விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் கூட்டணியில் பல படங்கள் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அந்த வரிசையில் வெளியான படம் தான் க/பெ ரணசிங்கம். வெளிநாட்டில் இழந்த கணவனின் உடலை மீட்க போராடும் சாதாரண பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் படும்பாடு ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தியது.

டிரைவர் ஜமுனா : ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள டிரைவர் ஜமுனா படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ஒரு கார் ஓட்டுநராக புதிய பரிமாணத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.