90's- க்கு அப்புறமும் நம்ம சினிமாவை ஆட்சி செய்த 5 ஹீரோயின்ஸ்..
5 Kollywood Actress sustain 25 years in tamil cinema: அழகும் நடிப்பு திறமையும் இணைந்து இருந்தால் மட்டும் போதாது. காலமும் கை கொடுத்தால் மட்டுமே நடிகைகள் சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்று சொல்லப்படாத விதி ஒன்று உள்ளது. ஒரே படத்தில் நடித்துவிட்டு காணாமல் போகின்ற நடிகையும் உள்ளனர். 25 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவை ஆட்டி படைக்கும் ஆன்டீஸ்களும் உள்ளனர்.
சினேகா: சுசி கணேசன் இயக்கத்தில் விரும்புகிறேன் படத்தின் மூலம் அறிமுகமான சினேகா தமிழ் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். 2012 பிரசன்னா உடன் திருமணத்திற்கு பின் குணச்சித்திர கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தவர் தற்போது வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் 68 இல் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.
சிம்ரன்: 90களில் தமிழ் சினிமாவின் கனவு கன்னியாக பல பேரின் கனவைக் கெடுத்தவர் சிம்ரன். திறமையான நடிகை மற்றும் இயக்குனர்களின் விருப்ப தேர்வாக இருந்த சிம்ரன் இன்றும் இளமை மாறாது நடித்து வருவது ஆச்சரியத்திற்கு உரியது. இவரின் நடிப்பில் அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி போன்ற படங்கள் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கின்றன.
ஜோதிகா: தமிழ் சினிமாவின் டாப் ஒன் நட்சத்திர ஜோடிகள் என்றால் அது சூர்யாவும் ஜோதிகாவும் தான். திருமணத்திற்கு பின் சில காலம் ஒதுங்கி இருந்த ஜோதிகா 36 வயதிலேயே மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார் பின் ராட்சசி, காற்றின் மொழி என நாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் மலையாளத்தில் இவர் மம்முட்டியுடன் நடித்த காதல் தி கோர் மாபெரும் வெற்றி பெற்றது.
த்ரிஷா: மௌனம் பேசியதே மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான திரிஷா தொடர்ந்து கால் நூற்றாண்டுக்கும் மேலாக ஏறுமுகமாகவே இருந்து வருகிறார். படத்திற்கு ஆறு முதல் எட்டு கோடி வரை சம்பளம் வாங்கும் திரிஷாவின் மார்க்கெட் குறையவே இல்லை. தொடர்ந்து மூன்று தலைமுறை முன்னணி நடிகர்களுடன் நாயகியாகவே இளமை மாறாது ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார்.
தமன்னா: கேடி மூலம் அறிமுகமான தமன்னா தென்னிந்திய சினிமாவை ஒரு கலக்கு கலக்கி விட்டு தற்போது பாலிவுட்டிலும் தனது வித்தையை காட்டி வருகிறார். ஜெயிலரின் காவலா பாடலுக்கு ஆடி ரசிகர்களை ஆக்கிரமித்தார் இந்த தமன்னா. படங்களைத் தவிர சமூக வலைதளங்களில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவதின் மூலம் ரசிகர்களுடன் ஆக்டிவாக இருக்கிறார் தமன்னா.
