சிம்ரன் ஆட்டத்தில் இளசுகளை கிரங்கடித்த 5 பாடல்கள்.. சுல்தானை மறக்காத லோகேஷ் கனகராஜ்

1990இல் ஆரம்பித்து இப்ப வரை எவர்கிரீன் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் சிம்ரன். சமீபத்தில் குட் பேட் அக்லி படத்தில் ஒரு சின்ன கேமியோ ரோல் பண்ணி இருந்தார். பிரியா கதாபாத்திரத்தில் அவர் ஸ்கிரீனில் தோன்றியதை பார்த்து அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள். நன்றாக நடனம் ஆடக்கூடிய சிம்ரன் கவர்ச்சியில் இளசுகளின் தூக்கத்தை கெடுத்த 5 பாடல்கள்

தொட்டு தொட்டு பேசும் சுல்தானா: 1999 இல் வெளிவந்த படம் எதிரும் புதிரும். இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சியில் மட்டும் தோன்றுவார். டான்ஸ் மாஸ்டர் ராஜ் சுந்தரத்துடன் அவர் ஆடிய பாடல் இப்ப வரை எவர்கிரீன் ஆக இருக்கிறது. குட் பேட் அக்லி படத்தில் கூட சுல்தான் பாடலை லோகேஷ் கனகராஜ் வைத்திருந்தார்.

சேலையில வீடு கட்டவா: 1998ஆம் ஆண்டு வெளிவந்த படம் அவள் வருவாளா. இந்த படத்தில் அஜித்துடன் இவர் ஆடிய சேலையில வீடு கட்டவா பாடல் இப்ப வரை பேமஸ். இல்லத்தரசிகள் அனைவரும் இந்த பாடலை அந்த காலகட்டத்தில் கொண்டாடி வந்தனர்.

நிலவை கொண்டு வா: எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த வாலி படம் அஜித் மற்றும் சிம்ரன் இருவரின் நடிப்பிற்கும் தீனி போட்ட படம். “நிலவை கொண்டு வா கட்டிலில் கட்டி வை” பாடலில் சிம்ரன் இளசுகளை தூங்கவிடாமல் செய்தார்.

தின்னாதே: 2000வது ஆண்டில் சரண் இயக்கத்தில் வெளிவந்த படம் பார்த்தேன் ரசித்தேன். இதில் முதல் முதலாக சிம்ரன் வில்லி கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார். இந்த படத்தில் இடம் பெற்ற தின்னாதே பாடலில் பிரசாந்த் மற்றும்சிம்ரன் இருவருக்கும் உண்டான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியது.

சர்க்கரை இனிக்கிற சர்க்கரை: எஸ் ஜே சூர்யா உடன் முதன் முதலாக நியூ படத்தில் ஜோடி போட்டார் சிம்ரன். 205ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படம் முழு நீள காமெடி படமாக அமைந்தது. சர்க்கரை இனிக்கிற சர்க்கரை பாடலில் கெட்ட ஆட்டம் போட்டிருப்பார் சிம்ரன்.