1. Home
  2. கோலிவுட்

அஜித், விஜய் என ரீ ரீலிசுக்கு காத்திருக்கும் 5 படங்கள்.. விஜயகாந்த் சம்பவம் செய்த நூறாவது படம்

அஜித், விஜய் என ரீ ரீலிசுக்கு காத்திருக்கும் 5 படங்கள்.. விஜயகாந்த் சம்பவம் செய்த நூறாவது படம்

தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் கோடம்பாக்கத்தை தொற்றிக் கொண்டது. பழைய சூப்பர் ஹிட் படங்களை நவீன டிஜிட்டல் முறையில் மீண்டும் தியேட்டரில் ரிலீஸ் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றனர். அப்படி சமீபத்தில் ரிலீசான படங்கள் எல்லாம் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி குவிக்கிறது. அடுத்தடுத்து அஜித், விஜய் என வரிசை கட்டி நிற்கும் பழைய படங்கள்.

மங்காத்தா - தீனா: மே ஒன்றாம் தேதி அஜித்தின் பிறந்தநாள். அன்று இந்த இரண்டு படங்களையும் ரீ ரிலீஸ் செய்வதற்கு திட்டம் போட்டு வருகிறார்கள். வெங்கட் பிரபு மற்றும் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த இந்த இரண்டு படங்களும் சக்கை போடு போட்டது.

சச்சின்: 2005 ஆம் ஆண்டு இயக்குனர் ஜான் மகேந்திரன் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு கூட்டணியில் வெளிவந்த படம் சச்சின். இப்பொழுது இந்த படத்தை ரீலீஸ் செய்ய தானு ஏற்பாடு செய்து வருகிறார். ஐய்யாசாமி கதாபாத்திரத்தில் வடிவேலு காமெடி இதில் நன்றாக அமைந்திருந்தது.

படையப்பா: எப்படியாவது பாட்ஷா மாதிரி ஒரு படம் வேண்டும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரஜினிக்கு கே எஸ் ரவிக்குமார் கொடுத்த சூப்பர் ஹிட் படம் படையப்பா. படத்தின் வில்லி ரம்யா கிருஷ்ணனுக்கு , நீலாம்பரி என்ற கதாபாத்திர பெயரை வாங்கி கொடுத்தது இந்த படம். சிவாஜி நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் இதுதான்.

கேப்டன் பிரபாகரன்: பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விஜயகாந்தின் நூறாவது படம் இது. அவருக்கு கேப்டன் என்ற பெயரை இந்த படம் வாங்கிக் கொடுத்தது. அவருக்கு வில்லனாக வீரபத்திரன் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் அசந்தி இருப்பார். இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனை செய்தது.

Cinemapettai Team
Thenmozhi

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.