1. Home
  2. கோலிவுட்

இருக்கிறத விட்டுட்டு பறக்குது ஆசை பட்ட ராகவா லாரன்ஸ்.. 5 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனதால் விழும் மரண அடி

இருக்கிறத விட்டுட்டு பறக்குது ஆசை பட்ட ராகவா லாரன்ஸ்.. 5 படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனதால் விழும் மரண அடி
இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்ட ராகவா லாரன்ஸின் தற்போதைய நிலைமை அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

Upcoming Movie Release Date: லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இப்படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்புகளை ரசிகர்கள் வைத்துக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் இந்த படம் வெளிவரும் போது மற்ற படங்கள் சற்று பின்னோக்கி போகும்.

அந்த வகையில் சில படங்களின் ரிலீஸ் செய்தியை கொஞ்சம் முன்னாடியே வைத்திருக்கிறார்கள். அது என்னென்ன படங்கள் எப்பொழுது ரிலீஸ் ஆகிறது என்று பார்க்கலாம். இயக்குனர் அகமது இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆக தயாராகி இருக்கிறது.

அடுத்ததாக ராகவா நடித்திருக்கும் சந்திரமுகியின் இரண்டாம் பாகம் இந்த மாத இறுதியில் ரிலீஸ் ஆகும் என்று வெளியிட்டு இருந்தார்கள். ஆனால் தற்போது இதில் மாற்றம் ஏற்பட்டு அடுத்த வாரம் 15ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. ஏற்கனவே ட்ரெய்லர் வெளியானதையொட்டி ரஜினி நடித்தது போல் இல்லை என்று பலரும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ரிலீஸ் தேதியும் மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கு பேசாமல் அவர் எப்பொழுதும் பேயை வைத்து உருட்டிட்டு நடித்திருக்கலாம். இருக்கிறதை விட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டால் இப்படித்தான் ஆகும் என்று பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். அடுத்ததாக சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள சித்தா திரைப்படம் இந்த மாத இறுதிக்குள் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்து வைத்திருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள பார்க்கிங் திரைப்படம் இந்த மாத 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர இருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் திரில்லர் படமாக அதிர வைக்கப் போகிறது. அடுத்ததாக விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ரத்தினம் திரைப்படமும் இந்த மாத கடைசியில் வெளிவர இருக்கிறது.

இந்த ஐந்து படங்களுமே இந்த மாத இறுதிக்குள் வெளியிட வேண்டும் என்ற நிர்ப்பந்தனையில் மீதமுள்ள இருக்க சின்ன சின்ன வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. அதற்கு காரணம் அடுத்த மாதம் லியோ படம் வர போகிறது என்பதற்காகத் தான்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.