தளபதி 68 படத்துக்கு முன்பே உறுதியான 69வது படம்.. மீண்டும் இணைய போகும் வம்பான கூட்டணி

விஜய், லோகேஷ் கூட்டணியில் தற்போது லியோ படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் வருகின்ற அக்டோபர் மாதம் ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாவதால் தற்போது படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. இப்போது லியோ படக்குழுவினர் காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள்.

இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ள நிலையில் லியோ படத்தை குறித்து அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் தளபதி 68 ஆவது படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறது.

பெரும்பாலும் அட்லீக்கு விஜய்யின் 68 ஆவது படத்தை இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனென்றால் பாலிவுட்டில் ஜவான் படத்தை முடித்த கையோடு விஜய் உடன் அட்லீ கைகோர்க்க உள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஏற்கனவே பிகில் படத்தில் இடம்பெற்ற ராயப்பன் கதாபாத்திரத்தை முழு படமாக எடுக்க அட்லீ திட்டம் வைத்துள்ளார்.

இப்போது தளபதி 68 படத்தின் இயக்குனர் உறுதியாகாத நிலையில் தளபதி 69 ஆவது படத்திற்கான கூட்டணி பேசப்பட்டு வருகிறது. அதாவது சமீபத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வசூல் வேட்டையாடிய வாரிசு படத்தின் கூட்டணி மீண்டும் இணைய உள்ளார்களாம்.

தெலுங்கு இயக்குனர் வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜு உடன் மீண்டும் விஜய் இணைந்து பணியாற்ற உள்ளார். ஏற்கனவே தில் ராஜு சில சர்ச்சையான பேச்சினால் பிரச்சனையை சந்தித்தார். இதனால் விஜயையும் இணையத்தில் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தார்கள்.

இவ்வாறு வாயை வைத்துக் கொண்டு சும்மா இல்லாம ஏதாவது பேசி வம்பை விலைக்கு வாங்கி வரும் தில் ராஜுடன் மீண்டும் விஜய் கூட்டணி போடுவது அவரது ரசிகர்கள் மத்தியில் பீதியை கிளப்பி உள்ளது. விஜய் மீண்டும் ஏதாவது சர்ச்சையில் சிக்க வைத்து விடுவாரோ என்ற பயத்திலும் உள்ளனர்.