Mgr and Sivaji: எம்ஜிஆர் மற்றும் சிவாஜியின் எதார்த்தமான நடிப்பையும், அத்துடன் சினிமா மூலம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சேர்க்க வேண்டும் என்று ஒரு சில கோட்பாடுகளை வைத்து முன் உதாரணமாக இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவர்களுடைய படத்திற்கே ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டிருக்கிறது.
பொதுவாக ஏ சர்டிபிகேட் ஒரு படத்துக்கு கிடைக்கிறது என்றால் அது சின்ன குழந்தைகள் அதாவது 18 வயதிற்கு குறைவானவர்கள் யாரும் பார்க்க கூடாது என்பதற்காக விதிக்கப்பட்ட தடை. ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு தணிக்கை குழு மூலமாக இந்த படம் எந்த முத்திரையை பெறும் என்பதை தீர்மானிப்பார்கள்.
அதைப் பொறுத்து தான் அவர்கள் அந்த படத்திற்கான சர்டிபிகேட்டை வழங்குவார்கள். அந்த வகையில் 1979 ஆம் ஆண்டு சிவாஜி நடிப்பில் கவரிமான் திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தில் சிவாஜி நடிப்பு அற்புதம், நடிகர் திலகம் என்று சொல்லும் அளவிற்கு பட்டய கிளப்பி இருப்பார். ஆனால் இது சமூகத்திற்கு தேவையில்லாத கருத்து என்று அந்த காலத்திலேயே மக்கள் புறக்கணித்த கதையாக இருந்தது.
கவரிமான் படத்தில் சிவாஜியின் மனைவி தகாத உறவில் இருப்பதை பார்த்ததும் அவரை கொலை செய்து விடுவார். இதனை நேரில் பார்த்த சிவாஜியின் மகள் ஸ்ரீதேவி படம் முழுக்க அப்பாவை வெறுத்து அவமதித்து பல அட்டூழியங்களை செய்யும் அளவிற்கு கதை நகர்ந்து வரும். ஆக மொத்தத்தில் இந்த மாதிரியான ஒரு கதை தேவையில்லை என்று மக்கள் இப்படத்தை பார்க்க விரும்பவில்லை.
இதனால் சின்ன குழந்தைகள் இந்த படத்தை பார்க்க கூடாது என்று இப்படத்திற்கு ஏ சர்டிபிகேட் வழங்கப்பட்டது. இதே மாதிரியே முதன் முதலில் தமிழில் ஏ சர்டிபிகேட் வாங்கிய படம் என்னவென்றால் எம்ஜிஆர் நடிப்பில் 1951 ஆம் ஆண்டு வெளிவந்த மர்மயோகி. இப்படத்தின் கதையானது அமானுஷ்ய சக்தியை வைத்து பல காட்சிகள் பயப்படும் அளவிற்கு அந்த காலத்திலேயே எடுக்கப்பட்டதால், அப்பொழுது இருந்த மக்களால் இப்படத்தை பார்ப்பதற்கு புறக்கணித்தார்கள்.
அதனால் அந்த காலத்தில் முதன் முதலாக ஏ சர்டிபிகேட்டை கொண்டு வந்து குழந்தைகள் பார்க்கக்கூடிய படம் இல்லை என்பதை வெளிக்காட்டும் விதமாக எம்ஜிஆர் படம் முத்திரை பெற்றது. அதனாலயே அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் பொழுது எந்த மாதிரியான படங்கள் மக்களிடம் நல்ல கருத்துக்களை உண்டாக்கும் என்பதில் அதிக கவனம் செலுத்தி நடித்து புரட்சித்தலைவர் மக்கள் மனதை வென்றிருக்கிறார்.