1. Home
  2. கோலிவுட்

எதிர்பார்த்த படத்தில் இப்படி ஒரு கேவலமான விஷயம்.. கௌதம் வாசுதேவ் மேனன், விக்ரம் கண்டுக்காத அவல நிலை

எதிர்பார்த்த படத்தில் இப்படி ஒரு கேவலமான விஷயம்.. கௌதம் வாசுதேவ் மேனன், விக்ரம் கண்டுக்காத அவல நிலை
இவரின் நடிப்பில் தங்கலான் படம் எதிர்பார்ப்பை முன்வைத்து வருகின்றது.

Actor Vikram: எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றவாறு தன் உடலையும், நடிப்பையும் வெளிப்படுத்தும் வல்லமை கொண்டவர் சியான் விக்ரம். இந்நிலையில் இவர் படத்தில் இப்படி ஒரு கேவலமான விஷயம் அரங்கேறியதை குறித்த தகவலை இங்கு காண்போம்.

பிரம்மாண்ட படைப்பின் வரலாற்று படமான பொன்னின் செல்வனின், கரிகாலன் கதாபாத்திரத்தில் தன் நடிப்பினை சிறப்புற வெளிக்காட்டி இருப்பார் விக்ரம். அதை தொடர்ந்து அடுத்த பரிமாணத்தில், இவரின் நடிப்பில் தங்கலான் படம் எதிர்பார்ப்பை முன்வைத்து வருகின்றது.

கோவிட் காரணம் காட்டி 5 வருடமாய் கிடப்பையில் போடப்பட்ட விக்ரம் படம் தான் துருவ நட்சத்திரம். இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தை மேற்கொள்கிறார். பல எதிர்பார்ப்புகளை கொண்டு வந்த இப்படம் இப்பொழுதுதான் வெளிவர தயாராகி உள்ளது.

இந்நிலையில் விக்ரம் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனனுக்கு தனித்தனியே சினிமாவில் நல்ல பெயர் இருந்து வருகிறது. அவ்வாறு இருக்க, இப்படம் வெளியே வந்தால் மட்டும் போதும், கல்லா கட்டி விடும் என குறிக்கோளுடன் செயல்படும் சம்பவம் படத்தில் அதிருத்தியை ஏற்படுத்துகிறது.

மேலும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் மற்றும் செகண்ட் சிங்கள் வெளியான நிலையில், பாடல் வரிகளுக்கு இவர்கள் மேற்கொண்ட முயற்சி படும் கவர்ச்சியாகவும், அருவருப்பாகவும் இருந்து வருகிறது. விக்ரம் படத்திலும் சரி கௌதம் வாசுதேவன் படத்திலும் சரி இது போன்ற பாடல்கள் இதுவரை வெளிவந்தது இல்லை.

ஆனால் தற்பொழுது துருவ நட்சத்திரம் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகி எதிர்பார்ப்பை முறியடிக்கும் விதமாய் இருந்து வருகிறது. சென்னை லோக்கல் தமிழில் இப்படி ஒரு பாடல் கேட்பதற்கு காது கூசம் அளவிற்கு அமைந்துள்ளதை, கொஞ்சம் கூட கண்டுக்காத நிலையில் கௌதம் மேனனும், விக்ரமும் இருப்பது சங்கடத்தை உருவாக்கி வருகிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.