Vidaamuyarchi – Ajith : மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் விடாமுயற்சி படம் உருவாகி வருகிறது. அஜித் ரசிகர்கள் இந்த படம் எப்போது வெளியாகும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தை பிரபல நிறுவனம் ஒன்று மிகப் பெரிய தொகை கொடுத்து கைப்பற்றி இருக்கிறது.
அதாவது சமீபகாலமாக திரையரங்கு வெளியீட்டுக்கு பிறகு ஒரு மாதம் கழித்து அந்த படங்கள் ஓடிடியில் வெளியாவது வழக்கமாக இருக்கிறது. அதுவும் பெரிய நடிகர்களின் படங்களை ரிலீசுக்கு முன்பே ஓடிடி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி விடுகிறது. அந்த வகையில் விடாமுயற்சி படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது.
அதாவது ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக சொன்னபோது நெட்பிளிக்ஸ் இந்த படத்தை வாங்குவதாக அறிவித்தது. அதன் பிறகு படத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட மகிழ்திருமேனி விடாமுயற்சி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். இந்நிலையில் தற்போது 105 கோடி கொடுத்து நெட்பிளிக்ஸ் விடாமுயற்சியை கைப்பற்றி உள்ளது.
அதாவது விடாமுயற்சி படத்தில் அஜித்தின் சம்பளமே கிட்டத்தட்ட 105 கோடி நெருக்கத்தில் தான் இருக்கிறது. அந்த தொகையை இப்போது நெட்பிளிக்ஸ் வாங்கி உள்ளதால் லைக்காவின் பாரம் குறைந்துள்ளது. மேலும் நெட்பிளிக்ஸ் விடாமுயற்சி படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளின் உரிமையை பெற்றிருக்கிறது.
மேலும் விடாமுயற்சி படத்தின் டிஜிட்டல் உரிமையை சன் டிவி பெற்றுள்ளது. அதாவது 50 கோடியில் இருந்து 60 கோடி வரை கொடுத்து வாங்கி உள்ளதாம். ஆகையால் ரிலீசுக்கு முன்பே விடாமுயற்சி படம் பெரிய தொகையைப் பெற்று இருக்கிறது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வரும் நிலையில் படத்தைப் பற்றிய அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும்.