1. Home
  2. கோலிவுட்

கமலை நம்பி காசை வாரி இறைக்கும் பிரபலம் .. எல்லாம் அந்த ஆண்டவருக்கு தான் வெளிச்சம்

கமலை நம்பி காசை வாரி இறைக்கும் பிரபலம் .. எல்லாம் அந்த ஆண்டவருக்கு தான் வெளிச்சம்

Kamal Haasan: ஆற்றில் போட்டாலும் அளந்து போடணும்னு ஒரு பழமொழி சொல்வாங்க. அதை இப்போது கமலை நம்பி காசை வாரி இறைத்து கொண்டிருக்கும் பிரபலத்திடம் தான் யாராவது நாலு பேர் போய் சொல்ல வேண்டும். என்னதான் காசு கடல் அளவில் இருந்தாலும், எது எதுக்கு செலவு பண்ண வேண்டுமோ அதற்கு பண்ணினால் தான் சரியாக இருக்கும். கமலும் இதை கண்டு கொள்ளாமல் அனுபவித்து கொண்டிருக்கிறார்.

கமல் பிக்பாஸ் முடிந்த கையேடு, நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணியில் இறங்கிவிட்டார். சமீபத்தில் மக்கள் நீதி மையத்தின் ஏழாம் ஆண்டு விழாவில் முழு அரசியல்வாதியாக மாறி பேச்சில் நெருப்பை கக்கியிருந்தார். சரி, அரசியல்வாதியாக சரியான நேரத்தில் வேலையை ஆரம்பித்த கமலிடம், ஆண்டவரே அப்புறம் நம்ம இந்தியன் 2 படம் என்னாச்சுன்னு ஒரு பக்கம் ரசிகர்கள் ஏக்கத்தோடு கேட்டு கொண்டிருக்கிறார்கள்.

படம் ரிலீஸ் ஆகுமா, ஆகாதா, ரிலீஸ் ஆகுறதுக்கு ஏதாச்சும் அறிகுறி இருக்குதான்னு பாத்தா, எந்த அப்டேட்டும் இல்லாமல் இருக்கிறது. இந்தியன் 2 வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டது, மீதமிருக்கும் காட்சிகளை வைத்து மூன்றாம் பாகம் உருவாக்கப்பட்டு கொண்டிருப்பதாக ஒரு தகவலும் வெளியானது. இந்த நிலையில் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பித்து இருப்பதாக செய்திகள் வெளியாகி, குழப்பத்தில் தலையை சுத்த வச்சு இருக்கிறது.

உண்மையில் இந்தியன் 2 படத்திற்கான படப்பிடிப்பு தான் ஆரம்பித்து இருக்கிறது. சித்தார்த் மற்றும் ப்ரியா பவனி சங்கர் சம்மந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த படப்பிடிப்பு சென்னை எண்ணுரில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பாடலுக்கான பட்ஜெட் மட்டும் 5 லட்சம் ஒதுக்கியிருக்கிறார்கள்.

இதுமட்டும் இல்லாமல் செம்மேஞ்சேரியில் ஒரு குடியிருப்பு பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். இதற்காக அந்த பகுதியில் உள்ள அடுக்குமாடி வீடுகளுக்கு வண்ணம் அடிக்கப்பட்டு இந்தியன் தாத்தாவின் முகங்கள் வரையப்பட்டு இருக்கின்றன. இந்தியன் 2 படத்தின் பட்ஜெட்டையே அதிக அளவில் உயர்த்தி இருக்கிறார் இயக்குனர் சங்கர்.

லைக்கா நிறுவனத்தின் சுபாஷ்கரனும் சங்கர் பேச்சை கேட்டு காசை வாரி இறைத்து கொண்டிருக்கிறார். இத்தனைக்கும் அந்த நிறுவனம் ஏற்கனவே பண சிக்கலில் தவித்து கொண்டிருக்கிறது. இந்த நிலைமையில் அவரை இழுத்து விட்டு வேடிக்கை பார்க்கிறார் சங்கர். படம் வெற்றி பெற்றால் பல மடங்கு லாபம் பார்த்து விடலாம். படம் ரிலீஸ் ஆனதும் என்ன ரிசல்ட் என்பது ஆண்டவருக்கு தான் வெளிச்சம்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.