சொகுசு பங்களா, மிரளவிடும் பல கோடி சம்பளம்.. வாரி இறைக்கும் அட்லி பட ஹீரோ

நடிகர் விஜய்யை வைத்து பல படங்களை இயக்கி, தொடர் வெற்றியை கண்டவர் இயக்குனர் அட்லி. தன்னில் உள்ள மாறுபட்ட திறமைகளை வெளிக்காட்டி தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர். தற்போது பாலிவுட்டில் இயக்கத்தை மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து இவர் படத்தின் நாயகன் தற்பொழுது செய்து வரும் அட்ராசிட்டி பற்றி பெரிதாக பேசப்பட்டு வருகிறது.

சுமார் 220 கோடி பட்ஜெட்டில் படமாக்கப்படும் ஜவான் மாபெரும் எதிர்பார்ப்பை முன்வைக்கும் விதமாக அமைந்து வருகிறது. இந்த நிலையில் பாலிவுட் தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான ஷாருக்கான் தன் உதவியாளருக்கு அதிகம் சம்பளத்தை வாரி வழங்கி வருகிறார். இதுக் கேட்பதற்கு அதிர்ச்சியை அளித்தாலும் அதுதான் உண்மை.

பாலிவுட் வட்டாரத்தில் இவரின் சம்பளம் தான் அதிகம் என்ற பேச்சு இருக்கும் நிலையில் தற்போது இவரின் செயல்கள் கொஞ்சம் ஓவராக தான் இருக்கிறது. தன்னிடம் 2012ல் இருந்து உதவியாளராக வேலை செய்யும் பூஜாவிற்கு ஒரு ஆண்டுக்கு சுமார் பத்து கோடி வரை சம்பளமாக கொடுத்து வருகிறாராம்.

மேலும் இதை தொடர்ந்து சொகுசு காரான மெர்சிடெஸ் ரக காரில் இவரின் உதவியாளர் பயணம் செய்து வருகிறாராம். அது மட்டும் இல்லாமல் சுமார் 50 கோடிக்கு மேற்பட்ட மதிப்புள்ள சொத்துகளை வைத்திருக்கிறாராம். மேலும் ஷாருக்கான் கூப்பிட்ட நேரத்திற்கு இவர் உடனே வர தன் வீட்டுக்கு அருகிலேயே சொகுசு பங்களாவை கட்டி வருகிறாராம்.

ஒரு உதவியாளருக்கு இது போன்ற சலுகைகளை செய்து வருகிறார் என்ற பேச்சுக்கு ஆளாகி வருகிறார் ஷாருக்கான். இது மட்டும் இல்லாமல் இவர் கட்டிக்கொடுக்கும் சொகுசு பங்களாவின் இன்டீரியர் டிசைனிங் வேலைபாடுகளை இவரின் மனைவி கூடவே இருந்து கண்காணித்துக் கொள்கிறாராம்.

இத்தகைய ஆடம்பர சலுகைகளை தன்னிடம் வேலை பார்க்கும் பணியாளருக்கு செய்து கொடுக்கும் பெரிய மனசு கொண்டவர் ஷாருக்கான் என்பதை தெரிவிக்கும் விதமாக இவரின் செயல்கள் இருந்து வருகிறது. மேலும் இத்தகைய செயல்கள் இவர் ஒரு பப்ளிசிட்டிக்காக கூட செய்யலாம் அல்லவா எனவும் கேள்வியை முன் வைக்கிறது.