1. Home
  2. கோலிவுட்

கெட்டு போன சாப்பாட்டை கொடுத்த படக்குழு.. தரமான சம்பவம் செய்த சரத்குமார்

கெட்டு போன சாப்பாட்டை கொடுத்த படக்குழு.. தரமான சம்பவம் செய்த சரத்குமார்

Sarathkumar: தமிழகத்தில் நாட்டாமை என்றாலே அது சரத்குமார் தான் என்று ஆகிவிட்டது. சினிமா மற்றும் அரசியலில் இவர் மீது கலவையான விமர்சனங்கள் இருந்தாலும் இவர் போகுமிடமெல்லாம் பாசிட்டிவ் எண்ணங்களை மட்டும் தான் விதைத்து வருகிறார்.

வில்லனிலிருந்து ஹீரோவாகி மீண்டும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் பன்முக திறமை கொண்ட நடிகர் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். அதிலும் கடந்த வருடத்தில் ரிலீஸ் ஆன போர் தொழில், பொன்னியின் செல்வன் படங்கள் எல்லாம் இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது.

சரத்குமார் என்றாலே நமக்கு ஞாபகம் வருவது நாட்டாமை, சூரிய வம்சம் போன்ற படங்கள்தான். சரத்குமார் சமீபத்தில் படபிடிப்பு தளத்தில் தனக்கு ஏற்பட்ட சம்பவம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார். விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவண்ணன், நிழல்கள் ரவி, ஆர் சுந்தர்ராஜன், பிரியா ராமன் என்ற மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே இணைந்த படம் தான் சூரியவம்சம்.

இன்று வரை சின்ராசு டெம்ப்லேட் இணையவாசிகளுக்கு பக்க பலமாக இருந்து வருகிறது. இந்த படத்தில் அப்பாவுக்கு பிடிக்காத மகனாக சரத்குமார் நடித்திருப்பார். தன்னுடைய தங்கையின் கல்யாணத்தில். யாரோ ஒருவர் போல் எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்து கொண்டிருப்பார்.

கெட்டு போன சாப்பாட்டை கொடுத்த படக்குழு

கடைசியில் பந்தியில் தனியாக உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கும் சரத்குமாருக்கு தேவையான உணவு பரிமாறுவார். சரத்குமார் அந்த சீனில் உணவை சாப்பிடுவது போல் வாயில் வைத்து விட்டு அப்படியே பின்னாடி திரும்பி துப்பி கொண்டே இருந்திருக்கிறார்.

இதை கவனித்த விக்ரமன் ஷார்ட் முடிந்ததும் என்ன ஆச்சு, அரிசி சாப்பாடு உங்களுக்கு பிடிக்கலையா என கேட்டிருக்கிறார். அதற்கு சரத்குமார் அந்த சாப்பாடு ரொம்பவும் மோசமாக கெட்டுப் போய்விட்டது அதனால் தான் துப்பினேன் என்று சொல்லி இருக்கிறார்.

கெட்டு போன சாப்பாட்டை கொடுத்த படக்குழு.. தரமான சம்பவம் செய்த சரத்குமார்
sarathkumar

அதாவது அந்த கல்யாண ஒரு நாள் முழுக்க நடந்து இருக்கிறது. காலையிலேயே விக்ரமன் தன்னுடைய உதவி இயக்குனர்களிடம் சரத்குமாருக்கு இரவு பிரஷ் ஆன சாப்பாடு எடுத்து வைத்து விடுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

பட குழுவும் தனியாக எடுத்து வைத்திருந்தாலும் நேரம் அதிகமானதால் சாப்பாடு கெட்டுப் போய்விட்டதாம். படப்பிடிப்பு எந்த விதத்திலும் காலதாமதம் ஆகி விடக் கூடாது என்பதற்காக அதை சொல்லாமலேயே சாப்பிடும் மாதிரி நடித்திருக்கிறார் சரத்குமார்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.