ஹீரோயின் போல் வளர்ந்து நிற்கும் வேட்டையன் மகள்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்

Lawrence’s Daughter Photo: லாரன்ஸ் பி வாசு இயக்கத்தில் சந்திரமுகி 2 படத்தில் நடித்துள்ளார். ரஜினி நடிப்பில் வெளியான இந்த படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் அதிக நாள் ஓடி வசூல் சாதனை படைத்தது. இந்த சூழலில் பல வருடங்களுக்குப் பிறகு சந்திரமுகி 2 படம் உருவாகியுள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆகையால் இப்படம் இந்த மாதம் திரைக்கு வர இருக்கிறது.

இந்த சூழலில் அடுத்தடுத்ததாக லாரன்ஸ் நிறைய படங்களில் நடித்து வருகிறார். சினிமாவை தாண்டி லாரன்ஸை ரசிகர்களுக்கு பிடிக்க காரணம் அவர் எதிர்பார்க்காமல் செய்யும் உதவிதான். அவர் நிறைய குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அதோடு மட்டுமல்லாமல் தன்னுடைய டிரஸ்டுக்கு இனி யாரும் பணம் அனுப்ப வேண்டாம் என்று கூட சமீபத்தில் கேட்டுக்கொண்டார்.

ஏனென்றால் தற்போது தனக்கு நிறைய படங்கள் வருவதால் அதன் சம்பாத்தியம் மூலம் என்னால் இவர்களுக்கு போதுமான உதவி செய்ய முடியும் என்று கேட்டுக்கொண்டார். இவ்வாறு நல்ல குணமுடைய லாரன்ஸ் தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் மிக மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். அந்த வகையில் அவரது மகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அதாவது லாரன்ஸ்க்கு ராகவி என்ற மகள் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு குழந்தையாக லாரன்ஸ் உடன் அவரை பார்த்த நிலையில் இப்போது டீன் ஏஜ் பெண்ணாக வளர்ந்து இருக்கிறார். அதுவும் மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் இப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது.

இதை பார்த்த ரசிகர்கள் இவர் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கப் போகிறாரா அல்லது தந்தை போல டான்ஸ் மாஸ்டராக வரப்போகிறாரா என்ற கேள்வியை எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் லாரன்ஸின் மனைவி லதா அவர்களும் தனது கணவரை போலவே சமூக சேவை செய்து வருகிறார்.

குடும்பத்தின் ஆதரவு மற்றும் பக்க பலம் இருந்தால் மட்டுமே தான் ஒருவரால் மற்றவர்களுக்கு உதவ முடியும். அந்த வகையில் லாரன்ஸ் மிகவும் கொடுத்து வைத்தவர். இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸ் வேட்டையனாக நடித்திருக்கும் நிலையில் அவரது மகளின் புகைப்படம் இப்போது காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

ஹீரோயின் போல் வளர்ந்து நிற்கும் வேட்டையன் மகள்

lawrence-daughter
lawrence-daughter
arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →