Ajith Controversy: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித், துணிவு படத்திற்கு பிறகு அடுத்ததாக விடாமுயற்சியில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவரை தேவையில்லாமல் தயாரிப்பாளர் ஒருவர் தரக்குறைவாக பேசி வருகிறார். இதனால் தல ரசிகர்கள் கொந்தளிக்கின்றர்.
செவன்த் சேனல் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான மாணிக்கம் நாராயணன் சமீப கால பேட்டிகளில் இஷ்டத்திற்கு பேசுகிறார். இது யாராலுமே சகித்துக் கொள்ள முடியவில்லை. இவர் இதுவரை எட்டு படங்களை தயாரித்திருக்கிறார். இவர் தயாரித்த படங்களில் விஜய் நடித்த மாண்புமிகு மாணவன், கமல் நடித்த வேட்டையாடு விளையாடு, வடிவேலுவின் இந்திரலோஹத்தில் நா அழகப்பன் போன்ற படங்களை தவிர வேற எதுவும் சொல்ற அளவுக்கு இல்ல.
எப்படியாவது விஜய், கமல் பட வாய்ப்பு பெற வேண்டும் என அஜித்தை பகடைகாயாய் உருட்டுகிறார். சமீபகால பேட்டிகளில் அஜித்தை பற்றி மாணிக்கம் நாராயணன் தரக்குறைவாக பேசி வருகிறார். அஜித் படங்கள் எதுவும் ஓடவில்லை என்றும், ஏமாற்றுபவர் என்று பேசி வருகிறார்.
இவரை இந்த அளவிற்கு பேச தைரியம் கொடுத்தது வேட்டையாடு விளையாடு ரீ ரிலீஸ் தான். சமீபத்தில் வேட்டையாடு விளையாடு படத்தை ரீ ரிலீஸ் செய்து பாக்ஸ் ஆபிஸில் கல்லா கட்டினார்கள். இதன்பிறகு தான் மாணிக்கம் நாராயணன் ஆட்டம் ஓவரானது.
அதனால்தான் வேட்டையாடு விளையாடு 2 எடுப்பதைப் பற்றி கமல் சுத்தமாகவே கண்டு கொள்ளவில்லை. விஜய் உடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்ற ஆசை இவருக்கு இருக்கிறது. அஜித்தை பற்றி தவறாக பேசினால், விஜய் கூப்பிட்டு வாய்ப்பு கொடுப்பார் என்று இப்படி எல்லாம் பேசுகிறார். இவர் கடைசியாக 2011ம் ஆண்டு பார்த்திபன் நடிப்பில் வெளியான வித்தகன் என்ற படத்தை தயாரித்தார்.
அவ்வளவுதான் அதன் பின்பு எந்த படத்தையும் எடுக்கல, ஆனா இப்ப சும்மா இவர் கையில் தான் தமிழ் சினிமா இருக்கிற மாதிரியும், தமிழ் சினிமாவை இவர்தான் கண்ட்ரோல் பண்ற மாதிரி பேச்சு பேசுகிறார். ஆனால் யாரும் இவரை கூப்பிட்டு படம் பண்ண கால் சீட் கொடுக்கல. இவர் பேச்சையும் கமல், விஜய் சுத்தமா கண்டுக்கவில்லை.