தற்போது ஏஆர் ரகுமான் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் அவர் உயரிய விருதை வாங்கும்பொழுது மேடைக்கு தன் மனைவியை வருமாறு அழைத்து அதன் பின் விருதை பெற்றார். அப்பொழுது அங்கிருந்த தொகுப்பாளர் அவரது மனைவியிடம் நீங்கள் ஏ ஆர் ரகுமான் பற்றி இரண்டு வார்த்தைகள் பேசுங்கள் என்று கேட்டிருக்கிறார். அப்பொழுது அவர், மனைவியிடம் ஹிந்தியில் பேசாத தமிழில் பேசு என்று கூறியிருந்தார்.
அதற்கு அவருடைய மனைவி எனக்கு தமிழ் கொஞ்சம் தெரியும் அதனால் முடிந்தவரை பேசுகிறேன் என்று ஒரு சில வார்த்தைகள் பேசி இருக்கிறார். இந்த விஷயம் தற்போது எல்லா இடத்திலும் பரவி வைரலாகி வந்து கொண்டிருந்தது. இது முடிவதற்குள் அடுத்த செய்தி ஆரம்பமாகிவிட்டது. அதாவது இவரை கஸ்தூரி ட்விட்டரில் கேள்வி கேட்டிருக்கிறார்.
இவர் கேட்ட கேள்வி நியாயமாக இருந்தாலும் அதை இவர் கேட்டது தான் பெரிய தப்பாக தெரிகிறது. அதனால் இவரை கலாய்த்து வருகிறார்கள். அது என்னவென்றால் ஏ ஆர் ரகுமான் மனைவிக்கு தமிழ் தெரியாதா, அப்போ அவர் எங்கு பிறந்தார், இத்தனை வருடங்கள் தமிழ்நாட்டில் இல்லையா, மற்றும் அவர்கள் வீட்டில் என்ன மொழி பேசுவார்கள், அவர்கள் வீடும் தமிழ்நாட்டில் இல்லையா இது என்ன கொடுமை என்று கேள்வி கேட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் நீங்கள் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள். அவர்கள் என்ன பேசினால் உங்களுக்கு என்ன நீங்க முதலில் ஒழுங்கா பேச கத்துக்கோங்க என்று கஸ்தூரியை எப்பொழுதும் கலாய்ப்பது போல் கலாய்த்து வருகிறார்கள். அதற்கு காரணம் கஸ்தூரி பேசினாலே அது தவறாகத்தான் இருக்கும், என்ன செஞ்சாலும் அது தப்புதான் என்று நினைத்து அவரை நெட்டிசன்கள் அலட்சியம் செய்து வருகிறார்கள்.
அதனால் இதையும் அவர்கள் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் இவர் கேட்டதும் சரிதானே என்று யாரும் யோசிக்கவில்லை. காரணம் கேள்வி கேட்டது கஸ்தூரி அதனால் தான். ஆனாலும் இவருக்கு இது தேவையில்லாத வேலை தான். ஏனென்றால் அவ்ளோ பெரிய மேடையில் ஏ ஆர் ரகுமான் அப்படி சொல்லணும்னு அவசியமே கிடையாது. இருந்தாலும் தமிழுக்கு பெருமை சேர்க்கும்படி அவர் அப்படி சொன்னது ரொம்பவே பெருமையாக இருக்கிறது என்று மக்கள் பூரித்து போயிருந்தார்கள்.
அதுவும் ஏ ஆர் ரகுமான் மனைவி மேடையில் ஏதாவது தெரியாமல் தவறாக தமிழ் பேசிவிட்டால் அது பெரிய தவறாகிவிடும் என்பதற்காக முன்கூட்டியே எனக்கு அந்த அளவுக்கு தமிழ் வராது என்று கூறி மேடை நாகரிகத்துக்காக அப்படி பேசி இருக்கிறார். அதை தவறாக புரிந்து கொண்டு கஸ்தூரி பேசுவது நியாயம் இல்லை தான். இந்நிலையில் இதைக் கெடுக்கும் விதமாக கஸ்தூரி, ஏ ஆர் ரகுமானை வம்புக்கு இழுப்பது போல் தேவையில்லாத கேள்வி கேட்டது யாருக்குத்தான் பிடிக்கும்.