Ravi Mohan : ஆர்த்தி ரவி தற்போது வரை ரவி மோகனுடன் இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பது அவரது அறிக்கையில் தெரிந்தது. இதுவரை அவரைப் பற்றி கெனிஷா உடன் தொடர்பு படுத்தி எந்த பதிவும் போட்டதில்லை.
ஆனால் இப்போது முதல் முறையாக தன்னுடைய மௌனத்தை கலைத்து தங்கள் பிரிவுக்கான காரணத்தை கூறியிருக்கிறார். அதாவது எங்களது வாழ்க்கை இந்த நிலைமைக்கு வந்ததற்கு காரணம் பணமோ, பொருளோ, அதிகாரமோ, கட்டுப்பாடோ இல்லை.
மூன்றாவது நபராக வந்த ஒருவர் தான் எங்களுக்குள் விரிசலை ஏற்படுத்தியிருக்கிறார். உங்கள் வாழ்வில் ஒளியை கொண்டு வந்தவர் என்று சொல்லும் அவர் எங்கள் வாழ்க்கையில் இருளை கொண்டு வந்துள்ளார்.
கெனிஷாவை பற்றி ஆர்த்தி ரவியின் அறிக்கை

சட்டப்படி விவாகரத்து தாக்கல் செய்யும் முன்னரே எங்கள் வாழ்க்கையில் வந்துவிட்டார். அதற்கு என்னிடம் தேவையான ஆதாரங்கள் இருப்பதாக ஆர்த்தி ரவி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி சமூக வலைத்தளத்தில் ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்.
அதாவது கெனிஷா உடன் ரவி பழகி வந்ததால் தான் குடும்பத்தில் பிளவு பட்டதாக ஆர்த்தி அதில் பதிவிட்டிருக்கிறார். மேலும் ரவி வீட்டை விட்டு வெளியேறும் போது அவரது பெற்றோர் வீட்டுக்கு செல்லவில்லை.
எங்கள் வாழ்க்கையில் அதிக சேதத்தை உண்டாக்கிய வீட்டின் கதவை தான் தட்டினார். இது எல்லாமே திட்டமிட்டு நடந்த சதி. இதற்கு மேல் இந்த உறவை மறைத்து வைக்க முடியாது என்பதற்காக என் மீது குற்றம் சுமற்றி வெளியேறி இருக்கிறார்.
இன்னும் நீதிமன்றத்தையும், சட்டத்தையும் நான் நம்புகிறேன். எனக்கான நீதி கிடைக்கும் என்று காத்திருக்கிறேன் என வேதனையுடன் ஆர்த்தி அந்த பதிவை போட்டிருக்கிறார்.