Leo Movie Arjun: ஆக்சன் கிங் அர்ஜுன், லியோ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பில் கடந்த மாதம் அவர் கலந்து கொண்டதாக தகவல்களும் வெளியாகின. இந்நிலையில் அந்த படத்தின் கெட்டப்பில் அர்ஜுன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி கொண்டிருக்கிறது. 60 வயதை கடந்த அர்ஜுன் இப்படி ஒரு கெட்டப்பில் இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியிருக்கிறது.
தளபதி விஜய் வாரிசு படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் பணியாற்றியிருக்கிறார். இந்த படத்தில் சஞ்சய் தத், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன், மிஸ்கின் போன்ற மல்டி ஸ்டார் கூட்டணியில் இணைந்திருப்பவர் தான் ஆக்சன் கிங் அர்ஜுன். இந்த கூட்டணியே லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கி இருக்கிறது.
90 களின் காலகட்டத்தில் முன்னணி ஹீரோவாக இருந்த அர்ஜுன் நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் வெற்றி கண்டவர். தன்னுடைய இரண்டாவது இன்னிங்சில் இயக்குனர் மணிரத்னத்தின் கடல் திரைப்படத்தின் மூலம் வில்லனாகவும் தன்னுடைய இன்னொரு பரிமாணத்தை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு காட்டினார்.
வில்லனாகவும் மிரட்டி ஜெயித்த அர்ஜுனுக்கு அடுத்தடுத்து நெகட்டிவ் ரோலில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. கேங்ஸ்ட்டர் கதையை மைய்யமாக கொண்ட லியோ படத்திலும் இவர் நெகட்டிவ் கேரக்ட்ரில் நடிப்பதாக தான் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. படப்பிடிப்பின் இறுதியில் கலந்து கொண்டாலும் அர்ஜுன் மற்றும் விஜய் இருவருக்குமிடையே பயங்கர சண்டை காட்சி இருப்பதாக செய்திகள் வெளியாகின.
தளபதி விஜய் எப்போதுமே பிட்னஸில் பயங்கரமாக கவனம் செலுத்தக் கூடியவர். ஆக்சன் கிங் அவருக்கே டப் கொடுக்கும் வகையில் இந்த புகைப்படங்களில் இருக்கிறார். இந்த வயதிலும் இப்படி உடற் கட்டமைப்புடன் இவர் இருப்பது ரசிகர்களுக்கே மிகப்பெரிய ஆச்சரியமாக தான் இருக்கிறது. சமீபத்தில் லியோ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ட்ரெண்டாகி கொண்டிருக்கும் நேரத்தில் அர்ஜுனும் இப்போது வைரலாகி வருகிறார்.
ஆக்சன் கிங் அர்ஜுனின் வைரல் புகைப்படம்

லியோ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மொத்தமும் முடிந்துவிட்ட நிலையில், தற்போது டெக்கினிக்கல் சம்மந்தப்பட்ட வேலைகள் மட்டுமே மீதம் இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையில் இந்த படம் வரும் அக்டொபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த படம் முடிந்த கையோடு ஒரு மாத கால ஓய்வுக்கு பிறகு, விஜய் தளபதி 68 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.