நா சார்பட்டா பரம்பரை பாக்ஸர்.. பா.ரஞ்சித்தை அதிர்ச்சியில் ஆழ்த்திய மதன் பாப், பாக்ஸர் டூ காமெடியன்!

Madhan Babu: நகைச்சுவை நடிகர் மதன் பாப், நடிப்பை தாண்டி அவருடைய சிரிப்பு தான் அவருக்கு அடையாளம். எப்படிப்பட்ட காட்சியிலும் இவர் வந்து நின்று சிரித்தால் எல்லோருக்குமே சிரிப்பு வந்துவிடும்.

அதிலும் பிரெண்ட்ஸ் படத்தில் இவருடைய கேரக்டர் பெரிய அளவில் ரசிக்கப்பட்டது. மதன் பாப்புக்கு சிரிப்பை தாண்டி கொஞ்சம் கூட வில்லத்தனமாக நடிக்க தெரியாது.

சார்பட்டா பரம்பரை பாக்ஸர்

விஷமத்தனமான கேரக்டர்கள் வேண்டுமானால் ஒரு சில படங்களில் பண்ணியிருக்கிறார். இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் சார்பட்டா பரம்பரை பாக்சர் என்பதை வெளியில் சொல்லி இருக்கிறார்.

இது குறித்து இயக்குனர் பா ரஞ்சித் இடம் ஒரு முறை சொன்னாராம். அவர் சார் முன்னாடியே தெரிஞ்சிருந்தா இந்த படத்துல ஒரு கேரக்டர் கொடுத்து இருப்பேன் என்று சொல்லி இருக்கிறார்.

சார்பட்டா பரம்பரை படத்தில் சொன்ன கோச் எல்லோருடமும் மதன் பழகி இருக்கிறாராம். மாட்டுத் தொழுவத்தில் தான் பாக்ஸிங் பயிற்சி செய்வார்களாம்.

தினமும் காலையில் டிபன் சாப்பிடுவது என்பதே கிடையாது. ஒரு கிலோ தக்காளி,, ஒரு கிலோ கேரட் 28 பச்சை முட்டை சாப்பிடுவாராம்.

தினமும் 6 கிலோ மீட்டர் நடை பயிற்சி மேற்கொள்வாராம். கூட இருப்பவர்களுடன் போட்டி போட்டு உடற்பயிற்சி செய்வாராம்.

இப்படிப்பட்ட பேக்ரவுண்டில் இருந்து வந்து மதன் பாப் காமெடியன் ஆகி இருப்பது ஆச்சரியம்தான்.

Leave a Comment