ஒரே ஒரு படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடித்த விஜயகாந்த்.. நண்பனுக்காக சூப்பர் ஸ்டாருடன் நடிக்க மறுத்த கேப்டன்

Actor Rajinikanth and vijayakanth did not act together: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் விருப்பத்தேர்வாக சினிமாவை விட்டா அரசியல் என கட்டம் கட்டி உள்ளனர். ஆனால் சில காலத்திற்கு முன்பாக இரு ஜாம்பவான்கள் தமிழ்நாட்டை ஆதிக்கம் செலுத்திய நிலையில் யாருக்கும் அந்த தைரியம் வந்ததில்லை. அதை உடைத்து எறிந்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.

துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும்  மக்களுக்கு சேவை செய்யும் நோக்கோடு தன் அரசியல் பயணத்தை துவங்கினார். இவரின் ஆரம்ப காலமோ வலிகளும் அவமானங்களும் நிறைந்தவையாக தான் இருந்திருக்கின்றன.

மதுரையிலிருந்து நடிக்கும் ஆர்வத்துடன் வந்த விஜயராஜ் ரஜினியின் மீது உள்ள ஈர்ப்பால் ரஜினிகாந்த் போன்று முன்னேற வேண்டும் என்ற துடிப்பாலும் விஜயராஜ், விஜயகாந்த் ஆக மாறினார். சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடிய புதிதில் அவருக்கு ரஜினிகாந்த் நடித்த “என் கேள்விக்கு என்ன பதில்” படத்தில் ரஜினிக்கு தம்பியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அதை மறுக்காமல் உடனே சரி என்றார்.

ரஜினியோ, இயக்குனர் மாதவனிடம்  விஜயகாந்த் தம்பியாக நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்தார். கருப்பா இருந்தா நீ ரஜினிக்கு தம்பியாகி விட முடியுமா என்று அவமானப்படுத்தவும் செய்தனர் பலர். இதற்கெல்லாம் பதிலடியாக நான் பெரிய ஹீரோவாக வெற்றி பெறுவேன் என்று சொல்லி அட்வான்ஸ்  பணம் 101 ஐ திருப்பி கொடுத்தார்  விஜயகாந்த்.

பின் முதல் படமான இனிக்கும் இளமையில் வில்லனாக தோன்றி பின் படிப்படியாக தூரத்து இடி முழக்கம், சட்டம் ஒரு இருட்டறை என வெற்றி படங்களை கொடுத்தார். எவரால் நிராகரிக்கப்பட்டாரோ அவரே தனது படத்தின் வில்லனாக விஜயகாந்த்யை செலக்ட் செய்து தூது அனுப்பினார்.

ஆம் ஏவிஎம் தயாரிப்பில் ரஜினி நடித்த முரட்டுக்காளை படத்தின் வில்லனுக்காக முதன் முதலில் விஜயகாந்தை அணுகி ஒரு லட்சம் அட்வான்ஸ் கொடுத்தனர். அதன்பின் நண்பர் ராவுத்தர், விஜயகாந்த்திடம் உன்னை காலி பண்ண செய்கின்ற சதி, இனி ஹீரோவாக மட்டுமே நடிக்க வேண்டும் வில்லனாக நடிக்க கூடாது என்று கட்டளை இட்டார். நண்பனின் சொல்லுக்கு இணங்கி அட்வான்ஸ் தொகையை திருப்பிக் கொடுத்தார் விஜயகாந்த். நண்பேண்டா! நண்பனுக்காக இறுதிவரை ஹீரோவாகவே நடித்தது குறிப்பிடதக்கது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →