1. Home
  2. கோலிவுட்

ராஜ்கிரனிடம் மன்னிப்பு கேட்டு கதறிய மகள்.. அதிர்ச்சி கிளப்பிய வீடியோ

ராஜ்கிரனிடம் மன்னிப்பு கேட்டு கதறிய மகள்.. அதிர்ச்சி கிளப்பிய வீடியோ
ராஜ்கிரனிடம் மன்னிப்பு கேட்டு கதறிய மகள்

Actor Rajkiran's daughter priya break up with his husband actor muneezraj: சினிமாவிலும் நடைமுறை வாழ்க்கையிலும் தனக்கென ஒரு கொள்கை பிடிப்புடன் வாழ்ந்து வருபவர் ராஜ்கிரண் அவர்கள். ராமநாதபுரத்தை சொந்த ஊராகக் கொண்ட ராஜ்கிரண் அவர்களின் இயற்பெயர் காதர் என்பதாகும். பாரம்பரியமான இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ராஜ்கிரண் அவர்கள் தமிழ் திரையுலகில் நிறைய புது முகங்களை அறிமுகப்படுத்தி இருந்தார்.

ஆரம்பத்தில் சினிமா விநியோகஸ்தரான ராஜ்கிரண் படிப்படியாக முன்னேற்றம் கண்டு நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு தமிழ் சினிமாவில் தரமான பல திரைப்படங்களை கொடுத்திருந்தார். 60 வயதை கடந்த போதும் தவமாய் தவமிருந்து, மஞ்சப்பை, ரஜினி முருகன், பவர் பாண்டி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தனிக்கவனம் பெற்றார்.

கடந்த ஆண்டு ராஜ்கிரனின் வளர்ப்பு மகள் பிரியா சின்னத்திரை நடிகர் முனீஸ் ராஜை திருமணம் செய்து வீடியோ பதிவிட்டு இருந்தார்.  இதனால் தன்னிடம் கூறாது திருமணம் செய்து கொண்ட மகள் மீது ஆத்திரமடைந்த ராஜ்கிரண், பிரியா என்னுடைய மகளே கிடையாது. இந்த சீரியல் நடிகர் தன்னை கேவலப் படுத்துவதற்காகவும் பணத்திற்காகவும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்று குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் உரைத்த ராஜ்கிரனின் மகள் பிரியாவும் எப்போதும் போல காதலர்களின் எவர்கிரீன் டயலாக் ஆன, "எங்கள் காதல் தெய்வீக காதல்! நாங்கள் உண்மையாக காதலிக்கிறோம்! வெறுத்தவர்கள் முன்பு வாழ்ந்து காட்டுவோம்!" என முனீஸ்ராஜுடன் தம்பதி சமேதமாக சபதம் செய்திருந்தார்.

ராஜ்கிரனிடம் மன்னிப்பு கேட்டு கதறிய மகள்.. அதிர்ச்சி கிளப்பிய வீடியோ

திருமணம் முடிந்து ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில் சமீபத்தில் ராஜ்கிரனின் மகள் பிரியா கண்ணீருடன் பகிர்ந்து உள்ள வீடியோ வைரலாகி வருகிறது. முனீஸ் ராஜை திருமணம் செய்த பிரியா அவர்கள், எங்கள் திருமணம் சட்டப்பூர்வமானது இல்லை என்றும், நாங்கள் தற்போது சேர்ந்து வாழ வில்லை, பிரிந்து விட்டோம் என்றும் கூறியுள்ளார். நான் எனது அப்பா ராஜ்கிரனை ரொம்ப வருத்த பட வைத்து விட்டேன். எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் போதாது என்று வீடியோ பதிவிட்டு மன்னிப்பு கேட்டு உள்ளார்.

ராஜ்கிரண் கூறியது போல பணத்தினால்தான் இவர்கள் பிரிந்தார்களா அல்லது இவர்களுக்கு இடையே வேறு ஏதாவது பிரச்சனை வந்ததா என்பதை நடிகர் முனீஸ் ராஜ் தெரிவித்தால் மட்டுமே வெட்ட வெளிச்சத்திற்கு வரும். காதலர்களுக்கு இருக்கும்  அன்பும் அக்கறையும் திருமணத்திற்கு பின் நடைமுறை வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகளை எதிர்கொள்ளும் போது காணாமல் போய்விடுவது காலத்தின் சூழ்ச்சியே.  ராஜ்கிரண் தனது மகளை ஏற்றுக் கொள்வாரா என்பது விதியின் கைகளிலே உள்ளது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.