Actor Shri: கடந்த சில தினங்களாக சமூக வலைதளத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தார் நடிகர் ஸ்ரீ.
மன உளைச்சல் மற்றும் ஏமாற்றத்தினால் ஸ்ரீ இந்த நிலைமைக்கு ஆளாகி விட்டதாக அவருடைய தோழியும் பேட்டிகள் கொடுத்துக் கொண்டிருந்தார்.
மருத்துவ கண்காணிப்பில் நடிகர் ஸ்ரீ
ஒரு வருடமாக இந்த நிலைமையில் இருக்கும் அவரை குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் தொடர்ந்து தேடி வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் தான் அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டு பெரிய அளவில் வைரலானார். இதை தொடர்ந்து பலரும் அவரிடம் இன்ஸ்டாகிராம் கமெண்டில் பேசி வந்தார்கள்.
பலரும் தங்களுடைய ஆற்றாமையையும் தெரிவித்து வந்தார்கள். ஸ்ரீ எதற்குமே பதில் அளிப்பதாய் இல்லை.
இந்த நிலையில் தினமும் ஒரு வீடியோ போட்டுக் கொண்டிருந்த ஸ்ரீ கடந்த இரண்டு தினங்களாக எந்த வீடியோவும் போடவில்லை. அவருடைய உடல் நிலையில் ஏதாவது பிரச்சனை இருக்குமோ என பலருக்கும் சந்தேகம் இருந்தது.
தற்போது ஸ்ரீ குடும்பத்தினர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள். அதில் நடிகர் ஸ்ரீ மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
உடல்நிலை மற்றும் மனநிலை சம்பந்தமான சிகிச்சைகள் எடுத்துக் கொண்டிருக்கிறாராம். மேலும் இந்த சமயத்தில் அவரைப் பற்றிய வீணான செய்திகள் மீடியாவில் வர ஆரம்பித்தால் அது அவருக்கு மீண்டும் மன உளைச்சலை கொடுக்கும் எனவும் தெரிவித்து இருக்கிறார்கள்.
இதனால் ஸ்ரீ குறித்து எந்த ஒரு தவறான செய்தி, பொய் வதந்திகளை பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்கள்.
எது எப்படியோ அவர் தன்னுடைய குடும்பத்துடன் இணைந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பது ரசிகர்களுக்கு பெரிய நிம்மதியை கொடுத்திருக்கிறது.
