1. Home
  2. கோலிவுட்

40 வயதில் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு.. ஒரு படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா

40 வயதில் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு.. ஒரு படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா

Sivakarthikeyan Networth: சிவகார்த்திகேயன் இப்போது முன்னணி அந்தஸ்தில் இருக்கிறார். அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அவருடைய நடிப்பில் பராசக்தி, எஸ்கே 23 ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது.

இந்நிலையில் இன்று அவர் தன்னுடைய 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் இன்றைய தினத்தில் எஸ் கே 23 படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட இருக்கிறது. அதேபோல் இன்னும் பல சர்ப்ரைஸ் ரசிகர்களுக்காக லைன் கட்டி நிற்கிறது.

ஒரு படத்துக்கு இத்தனை கோடி சம்பளமா

இந்த சூழலில் அவர் இதுவரை சேர்த்து வைத்த மொத்த சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி அமரன் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தற்போது ஒரு படத்திற்கு 50 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார்.

அதேபோல் சென்னை மற்றும் அவருடைய சொந்த ஊர் இன்னும் பிற இடங்களில் அவருக்கு சொத்துக்கள் இருக்கிறது. அதேபோல் ஆடம்பர பங்களாவும் உள்ளது.

இது மட்டும் இன்றி மினி கூப்பர், ஆடி Q7 உட்பட பல சொகுசு கார்களும் இருக்கிறது. ஒரு நடிகராக மட்டுமில்லாமல் பல தரமான படங்களையும் இவர் தயாரித்து வருகிறார்.

அது போக பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகள் இவரிடம் உள்ளது. இப்படியாக அவர் தற்போது வரை சேர்த்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு 160 கோடியாக உள்ளது.

விஜய் டிவியில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இன்று உலக அளவில் தெரிந்த ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Cinemapettai Team
Vijay

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.