1. Home
  2. கோலிவுட்

வளர்த்துவிட்ட வரை அசிங்கப்படுத்திய சூர்யா, விக்ரம்.. போறாத காலம் கழுகு போல் கொத்தும் அவலம்

வளர்த்துவிட்ட வரை  அசிங்கப்படுத்திய சூர்யா, விக்ரம்.. போறாத காலம் கழுகு போல் கொத்தும் அவலம்
சினிமாவில் தன்னை வளர்த்து விட்டவரை பதம் பார்க்கும் நடிகர்கள் சூர்யா, விக்ரம்

நடிகர் சூர்யா மற்றும் விக்ரம் சமகாலத்தில் ஒன்றாக வளர்ந்து வந்த நடிகர்கள். இருவருமே சினிமாவில் ஜெயிக்க பல ஆண்டுகளாக போராடி, இப்போது கோலிவுட் சினிமாவின் டாப் இடத்தில் இருக்கிறார்கள். கமர்ஷியல், வியாபாரம், மாஸ் என்பதை தாண்டி இவர்கள் இருவருமே சினிமாவுக்காக தங்களையே அர்ப்பணித்து கொண்டவர்கள். சினிமாவுக்காக எந்த அளவுக்கும் ரிஸ்க் எடுக்க கூடியவர்கள். இவர்கள் இருவருக்குமே 2000 ஆம் ஆண்டு என்பது மிகப்பெரிய பிரேக்கை கொடுத்தது என்று சொல்லலாம். கிட்டத்தட்ட 10 வருடங்களாக சினிமாவில் போராடிக் கொண்டிருந்தவர்தான் விக்ரம். பட வாய்ப்புகள் இல்லாமல் டப்பிங் ஆர்டிஸ்ட்டாக கூட இவர் இருந்திருக்கிறார். இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கொடுத்த படம் என்றால் அது சேது தான். அதுபோல தான் நடிகர் சூர்யாவும். மூன்று வருடத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவில் எந்த ஒரு அங்கீகாரமும் இல்லாமல் தான் இவர் இருந்தார். இவருடைய சினிமா கேரியரில் மிகப்பெரிய பிரேக் கொடுத்த படம் என்றால் அது நந்தா திரைப்படம் தான். சூர்யாவின் சினிமா வாழ்க்கையை நந்தாவுக்கு முன், நந்தாவுக்கு பின் என்று கூட சொல்லலாம். விக்ரமுக்கும் அப்படிதான். அவருடைய சினிமா கேரியர் சேதுவுக்கு முன், சேதுவுக்கு பின் என்று தான் பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரையும் சினிமாவில் ஒரு பெரிய நடிகனாக காட்டிய பெருமை இயக்குனர் பாலாவை தான் சேரும். பாலாவின் படங்கள் இல்லை என்றால் இவர்களின் சினிமா கேரியர் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது. இவர்கள் இருவர் மட்டுமில்லாது, நடிகர் ஆர்யாவுக்கு சினிமாவில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனையை நான் கடவுள் திரைப்படத்தின் மூலம் ஏற்படுத்தி கொடுத்தார். பரதேசி படத்தின் மூலம் அதர்வா முரளிக்கு நடிக்க தெரியும் என்று காட்டியவர் பாலா தான். இப்படி இந்த ஹீரோக்களை வளர்த்து விட்ட பாலா இப்போது இவர்களாலேயே காயப்பட்டு கொண்டிருக்கிறார். விக்ரம் சில வருடங்களுக்கு முன்பாகவே பாலா எடுத்த முழு படத்தையே அப்படியே சோலி முடித்து, அதே கதையை வேறு ஒரு இயக்குனருக்கு கொடுத்தார். சூர்யா இப்போது பாலா இயக்கத்தில் நடித்து கொண்டிருந்த வணங்கான் திரைப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார். ஆர்யா, சூர்யா, விக்ரம் என அனைவரும் பாலாவிடம் சண்டை போட்டு விட்டனர். இப்படி வளர்த்து விட்டவரையே கழுகு போல் இந்த ஹீரோக்கள் கொத்துகின்றனர்.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.