ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் சூர்யா.. சுதா கொங்கரா படத்திற்கு முன் போடும் மாஸ்டர் பிளான்

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் சூர்யா 42 என்று அழைக்கப்படுகிறது. சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த வேலையில் இருக்கும் பொழுது சூர்யா அடுத்தடுத்து இரண்டு படங்களுக்கு மாஸ்டர் பிளான் போட்டுவிட்டார்.

சூர்யா அடுத்தடுத்து வணங்கான், வாடிவாசல் திரைப்படங்களில் நடிப்பதாக இருந்தது. இதில் பாலா இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த வணங்கான் படத்திலிருந்து சூர்யா எந்த காரணமும் சொல்லாமல் விலகி விட்டார். இயக்குனர் வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படம் மட்டும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது.

Also Read: சூர்யா 42 பட ஹீரோயின் ஹாட் புகைப்படங்கள்.. இளசுகளை கண்டமாக்கிய குடும்ப குத்துவிளக்கு

இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. தற்போது விடுதலை படத்தின் வேலைகள் முடிவடைய இருக்கின்றன.

விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைய இருப்பதால் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவுக்கு ஒரு நல்ல செய்தியை கூறியிருக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் அப்டேட் செய்திதான் அது.

Also Read: சூர்யாவின் 42 வது படத்தின் தலைப்பு.. வெற்றியை உறுதி செய்த சிறுத்தை சிவா

வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பானது மார்ச் மாதம் துவங்க இருக்கிறது. ஆனால் படப்பிடிப்பு வெறும் 15 நாட்களுக்கு மட்டுமே நடைபெற இருக்கிறது. அதன் பின்னர் வெற்றிமாறன் ஒரு சின்ன பிரேக் எடுத்து படத்தின் மற்ற பகுதியை ரெடி பண்ண இருக்கிறாராம். இந்த பிரேக் நேரத்திலும் சூர்யா வேறொரு பிளான் போட்டு இருக்கிறார்.

வெற்றிமாறன் கொடுக்கும் இந்த பிரேக்கில் சூர்யா தன்னுடைய அதிர்ஷ்ட இயக்குனரான சுதா கொங்கரா திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தின் வேலைகளை இரண்டு மாதத்தில் முடிக்கவும் படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. அந்த பட வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் சூர்யா வாடிவாசல் படப்பிடிப்பில் இணைகிறார்.

Also Read: ரிலீசுக்கு முன்பே கொட்டும் பண மழை.. பல கோடிகளில் பிசினஸ் ஆன சூர்யா 42