Vadivelu: சில காலங்களாக அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த வடிவேலு மீண்டும் அரசியல் மேடை ஏறி இருக்கிறார். நேற்று நடந்த திமுக பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியுள்ளார்.

அப்போது இந்தி திணிப்பு பற்றியும் அடுத்த தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். இது ஒரு புறம் இருக்க அவரை ஆளும் கட்சி மீண்டும் மேடையேற்றி இருப்பது எடுபடுமா என்ற கேள்வி இருக்கிறது.

இதை ப்ளூ சட்டை மாறன் தன் சோசியல் மீடியா பக்கத்தில் நீண்ட பதிவாக போட்டுள்ளார். அதில் அவர் ஏற்கனவே திமுக பிரச்சாரத்தில் வடிவேலு ஈடுபட்டார்.

ஆனால் விஜயகாந்தை எதிர்த்து அவர் பேசியது அவருக்கே வினையாக முடிந்தது. இதனால் சினிமா வாழ்வும் ஆட்டம் கண்டது.
இம்சை அரசனின் ராசி எடுபடுமா.?
வடிவேலு சுயலாபத்திற்காக மட்டும்தான் திமுக மேடைகளில் தலையை காட்டுவார். அப்படித்தான் விஜயகாந்தை எதிர்ப்பதற்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஆனால் அந்த தேர்தலில் திமுக தோல்வியை தழுவியது. அதை தொடர்ந்து தற்போதும் அவரை மேடையேற்றி அழகு பார்த்துள்ளனர். ஆனால் அஜித் ரசிகர்களின் வாக்குகளை கட்சி எதிர்பார்க்கிறது.
அப்படி இருக்கும் போது இது முரண்பாடாக இருக்கிறது. ஏனென்றால் தனக்கு மரியாதை கொடுக்கவில்லை என அஜித் வடிவேலுவை ஒதுக்கியது அனைவருக்கும் தெரியும்.
அன்று வடிவேலு ஜெயலலிதாவை எதிர்க்கவில்லை. இன்று மத்திய அரசையும் எதிர்க்க மாட்டார். அதே போல் விஜய்யை எதிர்த்தால் சினிமாவும் கைவிட்டுப் போகும்.
படங்களிலேயே இவருடைய காமெடி இப்போது எடுபடவில்லை. அப்படி இருக்கும்போது பிரச்சாரத்தில் இவருடைய பேச்சு எப்படி எடுபடும்.
உதயநிதி மாமன்னன் படத்தோடு இவருடைய சகவாசத்தை விட்டிருக்க வேண்டும். இப்போது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்ட கதையாக இருக்கிறது.
ஒரு வேளை ஆளும் கட்சி அடுத்த தேர்தலில் வெற்றி பெறவில்லை என்றால் அதற்கு காரணம் அவர்களாகத்தான் இருக்கும் என தன் கருத்தை முன்வைத்துள்ளார்.
இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பார்க்கலாம் இம்சை அரசனின் வாய் ராசி எந்த அளவுக்கு பலன் தருகிறது என.