சீயான் விக்ரமுக்கு ஹாப்பி பர்த்டே.. 59 வயசிலும் கலக்குறாரே, மொத்த சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா.?

Vikram: சீயான் விக்ரம் இன்று தன்னுடைய 59 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சமீபத்தில் இவர் நடித்த வீர தீர சூரன் படம் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது.

சிறு பிரச்சினையின் காரணமாக முதல் இரண்டு காட்சிகள் ரத்து செய்தாலும் மாலை வெளியான படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதை அடுத்து முதல் பாகத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பொதுவாக ஒரு ஹீரோ முன்னணி இடத்தை அடைந்து விட்டால் உடனே கமர்சியல் படங்களை தேர்ந்தெடுப்பது வழக்கம். ஆனால் விக்ரம் அப்படி கிடையாது.

மொத்த சொத்து மதிப்பு எவ்ளோ தெரியுமா.?

நடிப்புக்கு தீனி போடும் படங்கள் தான் அவருடைய சாய்ஸ். அதற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் ரிஸ்க் எடுப்பார்.

அதனாலேயே அவருக்கு ரசிகர்கள் மத்தியில் தனி மதிப்பு உண்டு. அதேபோல் ஹீரோ என்ற பந்தா இல்லாமல் இயல்பாக பழகக் கூடியவர்.

இப்படிப்பட்ட அவர் ஆரம்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்கி இருக்கிறார். இந்த 59 வயதில் அவர் சேர்த்து வைத்த சொத்து மதிப்பு பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

அதன்படி இவர் மற்ற ஹீரோக்களைப் போல் 50 கோடி 100 கோடி என சம்பளம் வாங்குவது கிடையாது. தயாரிப்பாளருக்கு கஷ்டம் என்றால் அதை குறைத்துக் கொள்ளவும் தயங்காதவர்.

அந்த வகையில் வீர தீர சூரன் படத்திற்காக அவர் 30 கோடி வரை சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. அதையும் படப்பிரச்சினையின் காரணமாக கணிசமாக குறைத்துக் கொண்டாராம்.

மேலும் இவருக்கு சொந்தமாக ஆடம்பர பங்களா, விதவிதமான கார்கள் என பல சொத்துக்கள் இருக்கிறது. இதையெல்லாம் சேர்த்து பார்த்தால் இவருடைய மொத்த சொத்து மதிப்பு 200 முதல் 250 கோடியாக இருக்கிறது.

இப்படியாக முன்னேறிய விக்ரமின் மகனும் தற்போது நடிகராகிவிட்டார். இனி அப்பா மகனுக்கு இடையே பலமான போட்டி இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.