1. Home
  2. கோலிவுட்

கோப்ரா படத்தைப் பார்த்து ஜெர்க் ஆகும் நடிகர்கள்.. பலத்த யோசனையில் சிம்பு

கோப்ரா படத்தைப் பார்த்து ஜெர்க் ஆகும் நடிகர்கள்.. பலத்த யோசனையில் சிம்பு

தற்போது ஹீரோக்கள் பல கெட்டப் போடும் படங்களை ரசிகர்கள் வெறுக்கின்றனர். அவர்களுக்குப் பெரும்பாலும் கேஜிஎஃப், பொன்னியின் செல்வன், ஆர்ஆர்ஆர், பாகுபலி இதுபோன்ற படங்கள் தான் பிடிக்கிறது.

அப்படிப்பட்ட படங்களுக்கு தான் நல்ல வரவேற்ப்பை கொடுத்து சூப்பர் ஹிட் அடிக்க செய்கின்றனர். ஏனென்றால் சமீபத்தில் விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான கோப்ரா திரைப்படம் மிக பிரம்மாண்டமாக உருவாக்கினாலும், எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்காமல் போனது.

இதில் விக்ரம் 10 கெட்டப்பில் மிரட்டி இருப்பார். அப்படியிருந்தும் ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்காமல் போனது. இதனால் கோலிவுட் முன்னணி நடிகர்களும் கோப்ரா படத்தைப் பார்த்து, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாக போவதற்கு முன்பு, பல கெட்டப்பில் நடிக்க வேண்டியதாக இருந்தால் பின்வாங்குகின்றனர்.

மேலும் விக்ரமின் கோப்ரா படத்திற்கு வந்த நிலைமையை பார்த்த பிறகு சிம்பு பலத்த யோசனையில் இருக்கிறார். ஏனென்றால் அவரும் ஒரே படத்தில் விதவிதமான கெட்டப்புகளை போட விரும்புபவர்.

அப்படி அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தில் 19 வயது வாலிபனாக என்ட்ரி கொடுத்து ரசிகர்களையே ஆச்சரியப்படுத்தினார். அதே படத்தில் இன்னும் இரண்டு கெட்டப்பில் நடித்திருப்பார்.

இப்போது விக்ரமின் கோப்ரா படு தோல்வியை சந்தித்ததால், இனி பல கெட்டப்பில் நடிப்பதை தவிர்த்து விடலாம் என்ற எண்ணத்தில் சிம்பு இருப்பதாக தெரிகிறது. ஆகையால் அவர் இனி கமிட்டாகும் படத்தில் பல கெட்டப்பில் வருவதை குறைத்துக் கொள்ளப் போகிறாராம்.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.