நடிகர் சங்கத்திற்காக ஆரம்பிச்சு, நாசமா போன படம்.. வெட்டியா சீன் காட்டிட்டு இருக்கும் விஷால், கார்த்தி

Actor Vishal- Actor Karthi: உருட்டலாம், ஆனா ஏழு வருஷமாவா உருட்டுவது! தென்னிந்திய நடிகர் சங்க பொறுப்பில் இருக்கும் நடிகர்கள் இரண்டு பேர் ஒரு படத்தை சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்து நடிகர் சங்க கட்டிடத்தை கட்டுகிறோம் என்று வீராப்பாய் சவால் விட்டனர். ஆனால் அது வெறும் வெட்டி சவடால்தான். நடிகர் விஷால் மற்றும் நடிகர் கார்த்தி இருவரும் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பு வகுக்கின்றனர்.

அதிலும் விஷால் நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடித்துவிட்டு தான் திருமணம் செய்வேன் என்று ஓவரா சீன் போட்டார். கட்டிடம் முடிந்த பாடில்லை, அவருக்கு கல்யாணமும் ஆன பாடில்லை. அது ஒரு பக்கம் இருந்தாலும் நடிகர் சங்கம் கட்டிடத்திற்காக விஷால் மற்றும் கார்த்தி இருவருமே சம்பளம் வாங்காமல் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ என்ற படத்தில் நடிப்பதாக ஒத்துக் கொண்டனர்.

பிரபுதேவா இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்த படத்தை ஐசரி கணேசன் தயாரித்தார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக வனமகன் படத்தில் கதாநாயகி சாயிஷா நடிப்பதாகவும் அவருடன் ஆர்யாவும் முக்கிய கேரக்டரில் நடிக்க இருந்தார். இந்த படம் ஆரம்பிக்கப்பட்ட சில நாட்களிலேயே கைவிடப்பட்டது. அதற்கான காரணம் என்னவென்று யாருமே அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் சங்க கட்டிடத்திற்காகவே சம்பளம் இன்றி நடித்து தருவதாக கார்த்தி, விஷால் இருவரும் ’கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டனர். ஆனால் எல்லாம் வெறும் பேச்சு தான். ஷூட்டிங் ஆரம்பிச்சதும் முதல் வாரத்தில் விஷால் படப்பிடிப்பு தளத்தின் பக்கமே வரவில்லை. அதேபோல் இரண்டாவது வாரத்தில் கார்த்தியும் கழண்டுகிட்டார். இதையெல்லாம் பார்த்ததும் மூன்றாவது வாரத்தில் அந்த படத்தின் தயாரிப்பாளரான ஐசரி கணேசன் மொத்தமாக பேக் பண்ணிட்டார்.

வெட்டிப் பேச்சு பேசும் விஷால், கார்த்தி

இப்ப வரைக்கும் அந்த படத்தில் கிடப்பில் தான் போட்டிருக்கின்றனர். ஆனால் ‘கருப்பு ராஜா வெள்ளை ராஜா’ படம் படப்பிடிப்பிற்கு முன்பே வியாபாரம் ஆகிவிட்டதாகவும் கூறினர். மூன்று முன்னணி நடிகர்கள், படப்பிடிப்பிற்கு முன்பே வியாபாரம் ஆகியவை இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக்கி விட்டது. அந்த சமயத்தை சரியாக பயன்படுத்தி விஷால், கார்த்தி இருவரும் அந்த படத்தில் மட்டும் நடித்துக் கொடுத்திருந்தால் இன்று கேப்டன் விஜயகாந்தை எந்த அளவிற்கு திரைத்துறையினர் மதிக்கிறார்களோ, அதே அளவிற்கு இவர்களுக்கும் பேரும் புகழும் கிடைக்க வாய்ப்பிருந்திருக்கும்.

ஆனா இந்த படத்தின் 5 பாடல்கள் ரெக்கார்ட் செய்தும் ஒரு வாரம் படப்பிடிப்பு மட்டுமே சென்றது. அன்றைக்கு மட்டும் விஷால், கார்த்தி இருவரும் நடித்திருந்தால், இன்று கட்டிடம் முடிந்து திறக்கப்பட்டிருக்கும். கட்டிடத்தை முடிக்க வேண்டும் என்ற எண்ணமே அவர்களுக்கு இல்லை. அப்படி இருந்தால் ஏழு வருடத்திற்கு முன்பே அந்த படத்தை நடித்துக் கொடுத்திருப்பார்கள். இப்ப வரைக்கும் வெறும் வாய் தான், இவர்களுக்கு வாய் மட்டும் இல்லைனா நாய் தூக்கிட்டு போயிடும்.