Coolie : இதுவரை வெளியான படங்களை காட்டிலும் கூலி படத்தின் எதிர்பார்ப்பு உச்சம் தொட்டிருக்கிறது. முதல்முறையாக லோகேஷ் மற்றும் ரஜினி இணைந்துள்ள இந்த படத்தில் எக்கச்சக்க பிரபலங்கள் நடித்திருக்கின்றனர்.
குறிப்பாக பாலிவுட் நடிகர் அமீர்கான் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இதனாலையே படத்திற்கான ஹைப் அதிகமாக இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் டிக்கெட் புக்கான 2 மணி நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுவிட்டது.
ஆந்திரா போன்ற இடங்களிலும் அமோக வரவேற்பு இருந்து வருகிறதாம். பொதுவாகவே ஓவர்சீஸ் பிசினஸ் ரஜினிக்கு பெரிய அளவு ஒர்க் அவுட் ஆகாது. ஆனால் இப்போது அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் கூலி பிசினஸ் பட்டையை கிளப்பி இருக்கிறது.
கூலி படத்தால் பயத்தில் இருக்கும் நடிகர்கள்
அதுமட்டுமல்லாமல் கூலி படத்துடன் பாலிவுட் படமான வார் 2 படம் வெளியாகிறது. அந்தப் படத்தைக் காட்டிலும் கூலி படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருப்பது சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினியின் இந்த விஸ்வரூப வளர்ச்சியை பார்த்து பெரிய தலைகளை பயந்து போய் உள்ளனர்.
அதாவது பாலிவுட்டிலும் ரஜினியின் மார்க்கெட் இப்போது கூலி படத்தால் அதிகரித்ததால் அமிதாபச்சன், ஷாருக்கான் போன்ற நடிகர்களே தங்களது மார்க்கெட்டுக்கு பிரச்சனை வந்து விடுமோ என்ற பதட்டத்தில் இருக்கிறார்கள். தெலுங்கு தயாரிப்பாளர்களும் கலக்கத்தில் தான் இருக்கிறார்களாம்.
கூலி படத்திற்கு இவ்வாறு ஒரு எதிர்பார்ப்பு இருப்பதே மதில் மேல் இருக்கும் பூனை போல தான். ஏனென்றால் அதிகப்படியான எதிர்பார்ப்பு சில சமயங்களில் பெரிய ஏமாற்றத்தை கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. கூலி படம் அதில் விதிவிலக்காக இருக்கிறதா என்பது ஆகஸ்ட் 14ஆம் தேதி தெரியவரும்.