அசுரத்தனமான நடிப்பால் நதியாவை மிரட்டிய நடிகர்.. விக்ரம் பட ஏஜென்ட்க்கு கிடைத்த பாராட்டு

80 காலகட்ட சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் நடிகை நதியா. மிகக் குறுகிய காலம் தான் அவர் நடித்தார் என்றாலும் அவரின் அழகும், திறமையும் ரசிகர்களை கட்டிப்போட்டது என்று தான் சொல்ல வேண்டும். அப்போது பல பெண்களுக்கும் இவர்தான் ரோல் மாடலாக இருந்திருக்கிறார்.

இவருடைய உடை அலங்காரத்தை பார்த்து பல பெண்கள் அதை பின்பற்றியது குறிப்பிடத்தக்கது. இன்றும் கூட அவரை பல நடிகைகள் ரோல் மாடலாக வைத்து வருகின்றனர். அன்று பார்த்தது போன்றே இப்போதும் இளமை துள்ளலுடன் இருக்கும் நதியா ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அவர் நடித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் சிறுவனாக இருந்த ஒரு நடிகர் தற்போது தன்னுடைய அசுர வளர்ச்சியால் அவரையே மிரட்டி வருகிறார். அதைப்பற்றி நதியா தற்போது மிகவும் பிரம்மிப்புடன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.

அந்த நடிகர் வேறு யாரும் அல்ல மலையாளத்தில் பிரபலமாகி இன்று தமிழ் திரையுலகிலும் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கும் பகத் பாசில் தான். விக்ரம் திரைப்படத்தின் மூலம் அனைவரையும் வியக்க வைத்த அவர் இப்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகராக இருக்கிறார்.

அதைப்பற்றி குறிப்பிட்ட நதியா அவரை நான்கு வயதிலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறாராம். அப்போது குழந்தையாக பார்த்த அவர் இன்று பலரும் புகழும் ஒரு நல்ல இடத்தில் இருப்பது அவருக்கு வியப்பையும், சந்தோஷத்தையும் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மலையாளத்தில் அவருக்கு பகத் பாசிலை பிடித்தது போன்று தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி மற்றும் ஜெயம் ரவியையும் பிடிக்குமாம். நதியா ஜெயம் ரவிக்கு அம்மாவாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடித்திருந்தார். அப்போதிலிருந்தே அவரை மிகவும் பிடிக்கும் என்று கூறிய நதியா அவரின் பொன்னியின் செல்வன் படத்திற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.