சூர்யாவுக்கு இணையாக சிக்ஸ் பேக்ஸ் வைத்த ஆடுகளம் நடிகை.. இப்போது வைரலாகும் டாப்ஸி போட்டோ

நடிகை டாப்ஸி தெலுங்கு சினிமா மூலம் ஹீரோயினாக சினிமா உலகிற்குள் காலடி எடுத்து வைத்தார். தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதன் பின்னர்  காஞ்சனா, வந்தான் வென்றான் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

டாப்ஸி தற்போது பெரும்பாலும் பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும் தென்னிந்திய திரைப்படங்களிலும் அவ்வப்போது தலை காட்டி வருகிறார். தற்போது இவர் கைவசம் வோ லட்கி ஹை கஹான், டங்கி, ஃபிர் ஆயி ஹசீன் தில்ரூபா என்னும் மூன்று ஹிந்தி திரைப்படங்கள் இருக்கின்றன. மேலும் தமிழில் ஜன கன மன திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.

நடிகைகள் தற்போது தங்களுடைய டயட் மற்றும் ஃபிட்னஸில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்கள். மேலும் அவர்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்கள் கூட அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. இதில் முன்னணியில் இருப்பவர் நடிகை சமந்தா. அவரைப் போன்றே டாப்ஸியும்  தன்னுடைய ஃபிட்னஸில் அதிகமாக கவனம் செலுத்துகிறார். இதைப் பற்றி அவரே நிறைய பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.

அவருடைய பேட்டி ஒன்றில், சினிமாவை சார்ந்தவர்கள் தொழில் நிமித்தமாக பல இடங்களுக்கு செல்லும் பொழுது அங்கே கிடைக்கும் உணவுகளை உண்ண வேண்டி வருகிறது. அதன் தாக்கம் ஐந்து, ஆறு வருடங்களிலேயே உடம்பில் காட்டுகிறது. நான் என்னுடைய ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்துகிறேன். என்னுடைய டயட்டீசனுக்கு மட்டும் மாதம் ஒரு லட்சம் சம்பளம் கொடுக்கிறேன் என்று சொல்லி இருந்தார்.

சமீபத்தில் கடின உடற்பயிற்சியில் ஈடுபட்டு வரும் டாப்ஸி ஹீரோக்களுக்கு இணையாக சிக்ஸ் பேக் வைத்திருக்கிறார். தன்னுடைய ஜிம் பயிற்சியாளர் உடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு கீழே தன்னுடைய ஜிம் பயிற்சியாளருக்கு நன்றி சொல்லி இனி நான் எனக்கு பிடித்த பூரியையும், ரொட்டியையும் சாப்பிடுவேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

சிக்ஸ் பேக்ஸ் வைத்த டாப்ஸி 

tapsee-six-pack
tapsee-six-pack

நேற்று சிவகுமார் ரெட்ரோ மேடையில் பேசியபின் இந்த சிக்ஸ் பேக் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  உடம்பை வருத்தி சிக்ஸ் பேக் வைத்து ஹீரோ சூர்யாவை தாண்டி யார் இருக்கிறார்? என்று சிவக்குமார் மேடையில் பெருமை படுத்தி இருப்பார்.  அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நெட்டிசன்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றன.