Ravi Mohan: ஐசரி திருமணத்தை விட பேசு பொருளாக மாறியது ரவி பாடகி கெனிஷா உடன் வந்தது தான். நேற்று பட்டு வேஷ்டியில் புது மாப்பிள்ளை போல் ஒரே நிற உடையில் கெனிஷாவின் கையை பிடித்துக் கொண்டு ரவி வந்திருந்தார்.
இதனால் கோபப்பட்ட ஆர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில் நீண்ட அறிக்கை விட்டிருந்தார். இன்னும் எங்களுக்கு விவாகரத்து ஆகவில்லை, எப்போதும் நான் ஆர்த்தி ரவி தான் என்று கூறியிருந்தார்.
மேலும் என்னுடைய பிள்ளைகளுக்கு விவாகரத்தை பற்றி எதுவுமே தெரியாது. ஏதேதோ சாக்கு சொல்லி இவ்வளவு நாள் அவர்களை சமாளித்து வந்தேன். ஆனால் இன்று உங்களுடைய நடவடிக்கை மிகவும் மோசமாக இருந்தது.
ஆர்த்திக்கு ஆதரவாக உள்ள நடிகைகள்
நான் பழிவாங்க இந்த பதிவை போடவில்லை. என் பிள்ளைகளுக்காகத்தான் இந்த பதிவை போட்டுள்ளேன் என்று கூறியிருக்கிறார். அவரின் பதிவுக்கு பல பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தார்கள்.
அவ்வாறு குஷ்பூ மற்றும் ராதிகா இருவரும் ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலும் விவாகரத்திற்கு முன்பே ரவி இவ்வாறு செய்தது பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது.
ஏற்கனவே ஜெனிஷா உடன் பழகி வருவதால் தான் ஆர்த்தியை ரவி பெறுகிறார் என்ற தகவல் வெளியானது. அதற்கு ரவி மோகன் மறுப்பு தெரிவித்த நிலையில் இப்போது அது உண்மைதான் என்று அம்பலமாகி இருக்கிறது.