சல்லி சல்லியாக நொறுங்கிய ஆதிபுருஷ்.. இது என்ன பாகுபலி நாயகனுக்கு வந்த சோதனை

Actor Prabhas: பாகுபலி நாயகன் பிரபாஸ் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த ஆதிபுருஷ் தற்போது எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 500 கோடி பொருட்கள் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்ட இப்படம் இப்போது போட்ட காசை எடுப்பதற்கே தட்டு தடுமாறிக் கொண்டிருக்கிறது.

அனைவருக்கும் பரிச்சயமான ராமாயண காவியத்தை புதுமையான முறையில் கொடுக்கிறேன் என்ற பெயரில் இயக்குனர் கொத்து பரோட்டா போட்டிருப்பது தான் இந்த விமர்சனங்களுக்கு காரணமாக இருக்கிறது. 90 காலகட்டத்திலேயே சீரியல்களில் பிரபலமாக இருந்த இந்த ராமாயண கதையை தற்போது நினைவுக் கூறும் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் ஆதிபுருஷ் படத்தை சல்லி சல்லியாக நொறுக்கி கொண்டிருக்கின்றனர்.

அதிலும் படத்தின் விசுவல் மற்றும் கிராபிக்ஸ் காட்சிகள் படுமோசமாக இருப்பது தான் கடும் விமர்சனங்களை பெற்று வருகிறது. டெக்னாலஜி முன்னேறாத பல வருடங்களுக்கு முன்பே இந்த காவியம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் அனைத்து மொழிகளிலும் வெளிவந்திருக்கிறது.

அதிலும் மெகா தொடராக வந்த இந்த ராமாயணத்தை ரசித்துப் பார்த்த ஆடியன்ஸ் இப்போது ஆதிபுருஷ் படத்தால் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர். அதிலும் இன்றைய தலைமுறைக்கு இந்த காவியத்தை காட்டலாம் என்று தியேட்டருக்கு வந்த பல பெற்றோர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படையாகவே தெரிவித்து வருகின்றனர்.

அந்த அளவுக்கு ஆதிபுருஷ் ஒட்டு மொத்த ஆடியன்சையும் கடுப்பேற்றி இருக்கிறது. அதனாலேயே தற்போது படத்தின் வசூலும் மந்தமாகி வருகிறது. அந்த வகையில் படம் வெளியான முதல் நாளிலேயே உலக அளவில் வெறும் 130 கோடியை மட்டுமே வசூலித்திருந்தது. அதிலும் தமிழகத்தில் இப்படத்திற்கான வரவேற்பு படுமோசமாக இருக்கிறது.

பாகுபலி மூலம் உலக அளவில் கவனம் பெற்ற பிரபாஸ் அடுத்தடுத்த தோல்வி படங்களால் இப்போது தன் மார்க்கெட்டையே இழக்கும் நிலைக்கு சென்று இருக்கிறார். மேலும் பிரம்மாண்ட படம் என்பதை மனதில் கொள்ளாமல் கதையில் மட்டும் அவர் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும் என்ற கருத்தும் இப்போது எழுந்துள்ளது.