2வது ஹனிமூனுக்கு பின் விக்னேஷ் சிவன் போட்ட கண்டிஷன்.. நயன்தாரா ஸ்டேடஸ்க்கு வைத்த ஆப்பு

நயன்தாரா- விக்கி ஜோடி மூன்று வருடம் காதலித்து லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் எப்பொழுது திருமணம் செய்வார்கள் என்று பல வருடங்கள் கேட்ட நிலையில் கடைசியாக கஷ்டப்பட்டு திருமணத்தை நல்ல முறையில் நடத்தி முடித்தனர். திருமணத்தில் பல விமர்சனங்கள் வந்தாலும் அதை கண்டுகொள்ளாமல் வெற்றி பெற்றனர்.

இந்த ஜோடி ஹனிமூனுக்காக முதலில் தாய்லாந்து சென்றனர். அங்கு பல விதவிதமான புகைப்படங்களை எடுத்து ரசிகர்களுக்கு பகிர்ந்தனர். அதை முடித்துவிட்டு இரண்டாவதாக ஸ்பெயின் சென்றனர். இன்றுவரை அங்கு ஹனிமூன் கொண்டாடி வருகின்றனர், தினந்தோறும் பலவிதமான இளைஞர்களை ஏங்க வைக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை நயன்தாரா மஞ்சள் நிற தாலியை இன்றுவரை கழட்டாமல் அனைத்து புகைப்படத்திலும் தோன்றுகிறார். காரணம் தாலியின் மேல் அவ்வளவு மரியாதை வைத்துள்ளார். அதனால் நயன்தாரா இனிமேல் நடிக்க வர மாட்டார் என்ற செய்தி வெளிவருகிறது.

நடித்தால் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு தகுந்த மாதிரி தாலியை கழட்ட வேண்டியது வரும். அதனால் கஷ்டப்பட்டு செய்த திருமணத்தை இப்படி செய்ய மனம் வரவில்லை நயன்தாராவுக்கு. ஆகையால் இதுவரை கமிட்டான படங்களுக்கு மட்டும் நடித்துக் கொடுத்துவிட்டு. நடிப்புக்கு முழுக்கு போடலாம் என முடிவு எடுத்துள்ளாராம்.

நடிப்பை விட்டுவிட்டு தனது தயாரிப்பு நிறுவனம் மற்றும் தொழில்களை கவனித்து வரலாம், வீட்டில் இருந்து கொண்டு விக்னேஷ் சிவனுக்கு சேவை செய்ய ஆசைப்படுகிறாராம் நயன்தாரா. இது நயன் எடுத்த முடிவா இல்லை விக்னேஷ் சிவன் கண்டிஷன் போட்டு எடுக்க வைத்த முடிவா என்று தெரியவில்லை.

விக்னேஷ் சிவன் இயக்கும் அஜீத் நடிக்கும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக ஒப்பந்தமானார். ஆனால் இன்று அதில் ஐஸ்வர்யாராய் நடிக்க போவதாக அறிவிப்பு வந்ததும் பலருக்கு சந்தேகத்தை உறுதி செய்துவிட்டதாம். அதுபோலவே நயன்தாரா நடிப்புக்கு முழுக்குப் போட்டு விடுவார் என்று இப்போது செய்தி வெளிவந்து விட்டது.

நயன்தாரா நடிப்பை விட்டு விட்டு போவது ரசிகர்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. விக்னேஷ் சிவன் மீது உள்ள காதலா இல்லை வேறு என்ன காரணங்கள் என்று செய்திகள் வெளியே வரும் அதுவரை பொறுத்து இருந்து பார்ப்போம் என்று ரசிகர்கள் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.