1. Home
  2. கோலிவுட்

லால் சலாம் தோல்விக்கு அப்பா தான் காரணம்.. பகடைக்காயாய் உருட்டிய ஐஸ்வர்யா

லால் சலாம் தோல்விக்கு அப்பா தான் காரணம்.. பகடைக்காயாய் உருட்டிய ஐஸ்வர்யா

Lal Salaam : ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 மற்றும் வை ராஜா வை படங்களை இயக்கியிருந்தார். இந்த படங்கள் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை வைத்து லால் சலாம் என்ற படத்தை எடுத்திருந்தார்.

இந்தப் படத்தில் ரஜினி மொய்தீன் பாயாக கேமியோ தோற்றத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் மோசமான விமர்சனத்தை சந்தித்திருந்தது. அதோடு ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இணையத்தில் அதிகம் ட்ரோல் செய்திருந்தனர். இந்நிலையில் இப்போது ஒரு ஊடகத்திற்கு பேட்டி கொடுத்துள்ளார்.

அதாவது ஆரம்பத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தை கேமியோ தோற்றத்தில் வைக்க தான் ஐஸ்வர்யா முடிவு செய்து இருந்தாராம். ஆனால் சூப்பர் ஸ்டார் நடித்ததால் அதன் கதாபாத்திரத்தை விரிவுபடுத்த வேண்டி இருந்ததாம். இதனால் கதையிலும் சில மாற்றங்கள் செய்யப்பட வேண்டி இருந்தது.

அதுவும் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரம் இடைவெளிக்குப் பின் தான் வரும்படி நான் அமைத்திருந்தேன். ஆனால் படத்திற்கு கமர்சியல் விஷயங்கள் தேவைப்படும் என்பதால் கடைசி இரண்டு நாட்களுக்கு முன்பு படத்தில் எடிட்டிங் வேலைகள் செய்யப்பட வேண்டி இருந்தது.

மேலும் என்னுடைய லால் சலாம் பொருத்தவரையில் செந்தில் கதாபாத்திரம் தான் படம் முழுக்க கதாநாயகனாக வர வேண்டி இருந்தது. ஆனால் ரஜினி படத்துக்குள் வந்த பிறகு அவரது கதாபாத்திரத்தை ரசிகர்கள் பின் தொடர்ந்து ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதுவே லால் சலாம் படத்தின் தோல்விக்கான காரணம் என்று அப்பாவை பகடை காயாய் வைத்து கூறியுள்ளார் ஐஸ்வர்யா.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.