பிரபுதேவாவுடன் ஜோடி போட மறுத்த ஐஸ்வர்யா ராய்.. லிவிங்ஸ்டன் ஸ்கோர் செய்த படம்

Actor PrabhuDeva: பிரபுதேவா டான்ஸையும் தாண்டி, நடிப்பை மேற்கொண்டு முன்னணி கதாநாயகனாய் வலம் வந்தவர். இந்நிலையில் இமேஜ் பார்த்து இவருடன் நடிக்க மறுத்த நடிகையால் பரிபோன வாய்ப்பைப் பற்றிய தகவலை இங்கு காண்போம்.

இந்து, காதலன் போன்ற படங்களில் தொடர் வெற்றியை சந்தித்தவர் பிரபுதேவா. அதை தொடர்ந்து அடுத்த கட்ட படங்களை மேற்கொண்டு வந்த இவர் 1998 ஆம் ஆண்டு சசி இயக்கத்தில் வெளிவந்த சொல்லாமலே படத்தில் நடிப்பதாக இருந்தது.

இப்படத்தின் கதையை கேட்டு எஸ் தாணு தயாரிப்பை மேற்கொண்டார். மேலும் இப்படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாய் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைப்பதாக திட்டம் தீட்டி இருந்தார். படப்பிடிப்பிற்கான வேலை துவங்க பட்ட நிலையில், ஐஸ்வர்யா ராய் உலக அழகி என்ற இமேஜில் இருந்ததால் பிரபுதேவா உடன் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து இப்படத்தை கைவிட்டார் எஸ் தாணு. மேலும் தமிழ் சினிமாவில் தோன்றிய படங்களில் இதுவரை சொல்லப்படாத புது கதை என்பதால் இப்படத்தை சசி, சூப்பர் குட் பிலிம்ஸ் சௌந்தரி அவர்களுடன் இணைந்து தொடங்கினார். மேலும் தயாரிப்பாளர் எஸ் தாணுவும் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

அதைத்தொடர்ந்து இப்படத்தில் பிரபுதேவா, ஐஸ்வர்யா ராய் ஜோடிக்கு பதிலாக லிவிங்ஸ்டன் மற்றும் கௌசல்யா நடித்திருப்பார்கள். இப்படம் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆகும் நிலையில் இன்றும் மக்களிடையே நல்ல அவிப்பிராயம் கொண்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு எளிமையான கதை கொண்டு, தன் காதலை வெளிப்படுத்த தைரியம் இல்லாத ஹீரோ ஊமை போல் நடித்து பின் காதலுக்காக உண்மையாகவே தன் நாக்கை அறுத்துக் கொண்டு விடுகிறார். இவை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்தது.