நயன்தாராவுக்கு போட்டி த்ரிஷா, சமந்தா இல்லயாம்.. 15 படங்களை கையில் வைத்திருக்கும் ஒரே நடிகை, அடேங்கப்பா!

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஹீரோக்களுக்கு சமமான மாஸ் ரசிகர்களிடம் இவருக்கு இருக்கிறது. எத்தனை இடர்கள், எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் இவர் அதையெல்லாம் பொருட்படுத்தாது வெற்றியை மட்டுமே பதிலாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

நயன் கடந்த ஜூன் மாதம் தன்னுடைய ஆறு வருட காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன. நயன்தாரா திருமணத்திற்கு பிறகு இயக்குனர் அட்லீயின் இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

பொதுவாக நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து விடும். நயன்தாராவுக்கும் திருமணத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் எப்படி அமையும் என்று தெரியவில்லை. இப்போதே அடுத்த நயன்தாரா யாரென்று பேச்செல்லாம் தொடங்கிவிட்டது. இதில் சமந்தா, த்ரிஷா பெயர் தான் அதிகமாக வருகிறது.

ஆனால் அடுத்து நயன்தாரா இடத்தை பிடிக்க சத்தமில்லமால் ஒரு தமிழ் நடிகை உழைத்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா. ஆம் ஐஸ்வர்யா ராஜேஷ் தான் அந்த நடிகை. ஒரு காலத்தில் நயன்தாரா எந்த அளவுக்கு பிசியாக நடித்துக் கொண்டிருந்தாரோ அந்த அளவுக்கு இப்போது பிசியாக இருப்பது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தான்.

டிரைவர் ஜமுனா, தீயவர் குலை நடுங்க, த கிரேட் இந்தியன் கிட்சன் என அடுத்தடுத்து உமன் ஓரியன்டேசன் கதைகளில் தான் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்தும் இது போன்றே கதைகளில் நடிக்க இருப்பதாகவும், கதாநாயகர்களுக்கு ஜோடி போடும் கேரக்டர்கள் எல்லாம் வேண்டாம் எனவும் நடிகை நயன்தாராவை போலவே முடிவு எடுத்துவிட்டாராம்.

ஐஸ்வரயா ராஜேஷின் கைவசம் தற்போது 15 படங்கள் இருக்கின்றனவாம். அதாவது கிட்டத்தட்ட இரண்டரை வருடங்களுக்கு ஐஸ்வர்யாவிடம் கால்ஷீட் என்று எந்த தயாரிப்பாளர்களும் போக முடியாதாம். மேலும் ஒவ்வொரு படத்திற்கும் ஒரு கணிசமான தொகையை சம்பளமாக வாங்கி வருகிறார் ஐஸ்வர்யா. நயன்தாராவுக்கு போட்டி என்றால் அது இவர்தான் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறுகிறார்கள்.