நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக வினோத், போனி கபூர், அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் துணிவு. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது. துணிவு படத்திற்கு போட்டியாக விஜயின் வாரிசு படமும் வெளியாக உள்ளது.
இந்நிலையில் வாரிசு படத்திற்கு கிடைக்கும் அளவுக்கு துணிவு படத்திற்கு வசூல் கிடைப்பது குறைவு தான் என சினிமா விமர்சகர் அந்தணன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அதாவது சினிமா என்பது ஒரு விளம்பரம்தான். அதைப் பார்த்து தான் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருகிறார்கள்.
ஆனால் அஜித் தனது படத்திற்கு ப்ரமோஷன் செய்வதில்லை. ஒரு இயக்குனர் இந்த படம் எந்த கதையை கொண்டுள்ளது என்று ரசிகர்களுக்கு சொன்னால் தான் படத்தின் மீதான ஆர்வத்தை தூண்டும். ஆனால் துணிவு படத்திற்கு ப்ரமோஷன் இல்லாத காரணத்தினால் ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கிறது என்பது சந்தேகம்தான்.
மேலும் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது போல தமிழகத்தில் மட்டும் தான் துணிவு படத்திற்கு வரவேற்பு இருக்கும். ஏனென்றால் வலிமை படத்தை வெளிநாடுகளில் 17 கோடிக்கு வாங்கிய நிலையில் 15 கோடி கூட வசூல் செய்யவில்லையாம். இதனால் 2.5 கோடி அவர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
துணிவு படத்தின் கதை எப்படி இருக்கும் என்பது கூட தெரியாமல் வெளிநாட்டில் படத்தை வாங்க தயங்குகிறார்கள். இதனால் தற்போது வரை மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் துணிவு படம் வியாபாரமாகாமல் உள்ளதாக அந்தணன் கூறி அஜித் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார்.
மேலும் விஜய்க்கு வெளிநாட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளதால் வாரிசு படத்திற்கு அங்கு அதிக டிமாண்ட் உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் துணிவு படம் அதிக வசூல் பெற்றாலும் உலகம் முழுவதும் உள்ள கலெக்ஷனில் வாரிசு தான் அதிகம் பெறும் என சினிமா விமர்சகர்கள் கூறியுள்ளனர்.