1. Home
  2. கோலிவுட்

மிலன் இறப்பில் பிரச்சனைகளை சந்தித்த அஜித்.. தனி ஆளாக ஏகே செய்த உதவி

மிலன் இறப்பில் பிரச்சனைகளை சந்தித்த அஜித்.. தனி ஆளாக ஏகே செய்த உதவி

Ajith : அஜித் நேற்றைய தினம் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அவரது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆரம்பத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அஜித் மருத்துவமனை சென்றுள்ளார் என்று கூறப்பட்டது.

ஆனால் அஜித்துக்கு காதிற்கு கீழ் சிறிய கட்டி இருந்ததாகவும் மருத்துவர்கள் அதை எப்போது வேண்டுமானாலும் அகற்றி கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். மேலும் அஜித் உடனடியாகவே இதை அகற்ற சொன்னதால் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது. இப்போது ஜென்ரல் வாடுக்கு மாற்றப்பட்டுள்ள அஜித் நாளை வீடு திரும்ப இருக்கிறார்.

இந்நிலையில் மூளையிலிருந்து காதிற்கு வரும் ரத்தக்குழாயில் அடைப்பு வருவதற்கு காரணம் அஜித்தின் மன அழுத்தம் தான் என்று கூறப்படுகிறது. அஜித்தின் நெருங்கிய வட்டாரத்தில் இருந்த அடுத்தடுத்த இரண்டு மரணங்கள் அவரை அதிர்ச்சியில் தள்ளி இருக்கிறது.

அதுவும் விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தபோது அஜித் அப்போது பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். அதாவது மிலன் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் அஜித்துக்கு போன் செய்த இன்னும் அரை மணி நேரத்தில் செட்டுக்கு வந்து விடுவேன் என்று கூறி இருக்கிறார்.

அதன் பிறகு அஜித்தே மிலனை தொடர்பு கொண்ட போது மிலன் போனை எடுக்கவில்லையாம். மேலும் சிறிது நேரத்திலேயே மிலனின் அசிஸ்டன்ட் போன் செய்து அவர் இறந்துவிட்ட செய்தியை கூறியிருக்கிறார். மேலும் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வரும் போது தான் மிலன் உயிரிழந்தார்.

அப்போது இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா சார்பில் அங்கு யாரும் இல்லாத காரணத்தினால் அஜித் தனது சொந்த முயற்சியால் மிலனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளார். அதிலும் மிலனுக்கு இரண்டு மனைவிகள் இருந்ததால் யார் வீட்டுக்கு அவரது பிரேதம் செல்ல வேண்டும் என்ற பிரச்சனையும் இருந்துள்ளது.

இவை அனைத்தையும் அஜித் தான் பேசிய சமாளித்திருக்கிறார். இதை அடுத்து சமீபத்தில் அஜித்தின் நெருங்கிய நண்பர் வெற்றி துரைசாமி இறப்பும் அவரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இவ்வாறு அடுத்தடுத்த பயங்கரமான சம்பவத்தால் தான் அஜித்துக்கு திடீரென இவ்வாறு நடந்துள்ளதாக யூகிக்கப்படுகிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.