உங்க பசங்க பண்ணது சரியா விஜய்.. நெருப்பாய் சீரும் அஜித் ரசிகர்கள், இது என்னப்பா புது பஞ்சாயத்து!

Good Bad Ugly: இணையதளத்தில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பஞ்சாயத்து நடக்கும். அப்படித்தான் அஜித்தின் நடித்த குட் பேட் அக்லி பட ரிலீஸ்க்கு பிறகு புதிய பஞ்சாயத்து ஒன்று தொடங்கி இருக்கிறது.

அதான் விஜய் சினிமாவை விட்டு போறாரே இனி அஜித் மற்றும் விஜய் சண்டை இருக்காது என்று தான் எல்லோரும் பெருமூச்சு விட்டிருப்பார்கள்.

இது என்னப்பா புது பஞ்சாயத்து!

போற போக்குல தட்டிட்டு போற மாதிரி திடுக்கினு இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. முன்னாடி எல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆகி கொஞ்ச நேரத்தில் இணையதளத்தில் ரிலீஸ் ஆனால் அது தமிழ் ராக்கர்ஸ் வேலையாக இருக்கும் என்று சொல்வார்கள்.

குட் பேட் அக்லி படத்தை பொருத்தவரைக்கும் படம் ரிலீஸ் ஆகிய சில மணி நேரங்களிலேயே கிளியர் பிரிண்ட் இணையதளத்தில் வந்துவிட்டது.

ஒட்டுமொத்தமாக ஒரு சாரார் விஜய் ரசிகர்கள் தான் இந்த வேலையை பார்த்தது என மிகப் பெரிய பிரச்சனையை கிளப்பி இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் சமீபத்தில் தன்னுடைய ஆதரவாளர்கள் ட்விட்டரில் TVK for TN என்ற ஹேஸ்டைக்கை வைரல் ஆக்கியதை விஜய் பெருமையாக பேசி இருந்தார்.

இது மாதிரி உங்களுடைய ரசிகர்கள் இணையதளத்தில் செய்யும் எல்லா வேலைகளையும் நீங்கள் ரசிக்கிறீர்களா.

இப்படி படம் ரிலீஸ் ஆகி சில மணி நேரத்திலேயே அதை இணையதளத்தில் கொண்டு வந்தது தப்பில்லையா விஜய் என அஜித் ரசிகர்கள் ஆதங்கத்துடன் பதிவிட்டு வருகிறார்கள்.