பிட்டு படத்தில் நடித்த அஜித்தின் நண்பர்.. ஏமாற்றி நடிக்க வைத்ததாக புலம்பிய கொடுமை

Ajithkumar: நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்களுடைய ஆரம்ப காலகட்டத்தை நடிக்கும் போது பெரும்பாலும் அவர்களுடைய கேரக்டர் பற்றி கூட இயக்குனர்கள் சொல்வது கிடையாது. ஏதாவது ஒரு கேள்வி கேட்டால் கிடைத்த வாய்ப்பு போய்விடுமோ என்ற பயத்தில் இயக்குனர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்துவிட்டு போகும் நடிகர்களும் இருக்கிறார்கள்.

இதற்கு முக்கிய காரணமாக இருப்பது, எப்படியாவது ஸ்கிரீனில் முகத்தை காட்டி விட்டால் அதை தொடர்ந்து வாய்ப்புகளை வாங்கி விடலாம் என்பதற்காகத்தான். ஒரு படத்தின் சின்ன கேரக்டரில் நடித்தால் கூட அதன் மூலம் சினிமாவில் இருப்பவர்கள் தொடர்புகள் கிடைக்கும், அவர்கள் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை வாங்கிவிடலாம் என்ற ஆசையில் தான் இவர்கள் நடிப்பது.

அப்படித்தான் அஜித்தின் நண்பர் ஒருவர் ஆரம்ப காலகட்டத்தில் வசமாக சிக்கியிருக்கிறார். எது போன்ற கேரக்டரில் நடிக்கிறோம் என்று தீர விசாரிக்காமல் நடித்து இருக்கிறார். கடைசியில் அந்த படம் கடைசியில் அந்த படம் ஏ கண்டன்ட் படமாக இருந்திருக்கிறது. அந்த நடிகர் இன்று பிரபல நடிகராக மாறி இருந்தாலும், அவர் ஆரம்ப காலகட்டத்தில் இது போன்ற ஒரு படத்தில் நடித்தார் என்ற பேச்சு இன்னும் மாறவே இல்லை.

Also Read:2023-ல் ஓடிடி-யில் அதிகம் பார்க்கப்பட்ட 5 படங்கள்.. 2.5 கோடி பார்வையாளர்களைக் கவர்ந்த அஜித்

1971 ஆம் ஆண்டு வெளியான நான்கு சுவர்கள் என்னும் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பப்லு பிரித்விராஜ் தான் அந்த நடிகர். சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் படங்களில் குழந்தையின் நட்சத்திரமாக இவர் நடித்திருக்கிறார். மேலும் அஜித் மற்றும் விஜய்க்கு முன்பாகவே இவர் சினிமாவில் பிரபலமாக ஆரம்பித்திருந்தாலும் ஏதோ ஒரு காரணத்தால் இவரால் அவர்கள் அளவுக்கு ஜொலிக்க முடியாமல் போய்விட்டது.

மலையாத்தி பொண்ணு

பப்லு 1989 ஆம் ஆண்டு மலையாத்தி பொண்ணு என்னும் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் முழுக்க ஏ கன்டென்ட் படமாக இருந்திருக்கிறது. ஆனால் அவரிடம் இது பற்றி எதுவும் சொல்லாமல் ஏமாற்றி நடிக்க வைத்திருக்கிறார்கள். இது பற்றி அவரிடம் கேட்ட பொழுது, அது நடிப்பு, மேலும் அதில் தவறாக நான் எதுவும் நடக்கவில்லை, அந்தப் பெண்தான் அடித்தார் என்று சொல்லி இருக்கிறார்.

இப்ப சொன்னாலும் நான் அது மாதிரி நடிப்பேன், ஏனென்றால் அதெல்லாம் வெறும் நடிப்பு தான் என்று கூறியிருக்கிறார். சமீபத்தில் இவர் அவருடைய காதலியை பிரிந்து விட்டதாக சமூக வலைத்தள செய்திகள் உறுதிப்படுத்தின. அதைத்தொடர்ந்து பிரித்விராஜ் நிறைய சேனல்களுக்கு பேட்டிகள் கொடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:எந்த கொடியும் இல்ல ஸ்டிக்கரும் இல்ல.. கோடியில் வாரி வழங்கிய அஜித், பார்த்து கத்துக்கங்க தளபதி