1. Home
  2. கோலிவுட்

AK-62 அட்வான்ஸ் தொகையை அள்ளிக்கொடுத்த லைக்கா.. விக்கி - நயன் ஜோடியாக வாங்கிய முதல் சம்பளம்

AK-62 அட்வான்ஸ் தொகையை அள்ளிக்கொடுத்த லைக்கா.. விக்கி - நயன் ஜோடியாக வாங்கிய முதல் சம்பளம்

ஏகே 61 திரைப்படத்தின் அப்டேட்டை தொடர்ந்து, ஏகே 62அப்டேட் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும், தல 61 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. இதனிடையே ஹைதராபாத்தில் போராட்டம் நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஏகே 62 படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலன்று ரிலீசாகும் என்றும் நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்துடன் ஏகே 62 படம் போட்டிபோடும் என தெரிவிக்கப்பட்டது . இதனிடையே ஏகே 62 திரைப்படத்தை தயாரிக்கும் லைக்கா தயாரிப்பு நிறுவனம், இப்படத்தில் நடிப்பவர்களுக்கு சம்பளத்தை கொடுத்து உள்ளது. அதில் நடிகர் அஜித்திற்கு 105 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்ட நிலையில், முப்பது கோடி வரை அட்வான்ஸ் சம்பளமாக கொடுத்துள்ளது. மேலும் நடிகை நயன்தாராவிற்கு 10 கோடி, இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்திற்கு 5 கோடி, விக்னேஷ் சிவனுக்கு 11 கோடி என சம்பளத்தை கொடுத்துள்ளது. இதனிடையே இத்திரைப்படம் இந்த வருடம் நவம்பர் மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் விக்னேஷ் சிவன் ஏற்கனவே அரசியல் சம்மந்தமாக ஏகே 62 படத்தின் கதையை எழுதிய நிலையில், அஜித்குமார் அதனை மறுத்துள்ளார். மேலும் வேறொரு கதையை எழுதுமாறு விக்னேஷ் சிவனை அறிவுறுத்தியிருந்தார். இதனிடையே தற்போது நயன்தாராவை திருமணம் செய்துள்ள விக்னேஷ் சிவன் ஹனிமூனுக்கு பாங்காங் வரை சென்றுள்ளார். கூடிய விரைவில் இந்தியாவிற்கு வந்து ஏகே 62 கதையை எழுதி படப்பிடிப்பை தொடங்கும் பணிகளில் விக்னேஷ் சிவன் ஈடுபடுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பல வருடங்கள் கழித்து அஜித்தின் திரைப்படங்களின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாவது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.