அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என ஆசைப்பட்ட பிரபலம்.. 500 கோடி, பேரம் பேசிய சம்பவம்

அஜித்குமாருக்கு அரசியல் சுத்தமா புடிக்கவே புடிக்காது, இதனை பலமுறை அவரே வெளிப்படையாக கூறியுள்ளார். மேலும் தன்னுடைய கருத்தை மற்றவர்களிடம் திணிப்பது தனக்கு விருப்பமில்லை எனவும், சூசகமாக பல மேடைகளிலும் தெரிவித்துள்ளார். இவ்வளவு ஏன் திமுக ஆட்சியில் கலைஞர் முன்பே அஜித் அவர்கள் தனக்கு இந்த விழாவில் கலந்து கொள்ள விருப்பமில்லை என தெரிவித்திருந்தார்.

ஆனால் சிலர் தன்னை கட்டாயப்படுத்தி வரச் சொன்னதாகவும் ஒரு சிலர் மிரட்டுவதாகவும் சினிமாவில் இருப்பவர்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள் என தெரிவித்திருந்தார். இதனை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த எழுந்திருந்து கை தட்டி அவரை வரவேற்றார். இந்த வீடியோ தற்போது வரை ரசிகர்களால் பார்க்கப்பட்டு வைரலாகி கொண்டுதான் இருக்கிறது.

அஜித்தை அரசியலுக்கு கொண்டு வர பலரும் திட்டமிட்டிருந்தனர். ஆனால் வெளிநாட்டு தொழிலதிபர் ஒருவர் அஜித்தை வைத்து அரசியல் செய்ய ஆசைப்பட்டு உள்ளார். அதாவது அசோக் ஜி என்பவர் சென்னையில் உள்ள ஐடிசி ஹோட்டலுக்கு வந்துள்ளார். இவரை பார்ப்பதற்காக பிரபல பத்திரிக்கையாளர் அந்தனன் ஐடிசி ஹோட்டலுக்கு சென்று உள்ளார்.

அப்போது அசோக் ஜி அவர்கள் நீங்கள் பத்திரிக்கையாளர் அஜித்தை பார்த்துள்ளீர்களா என கேட்டுள்ளார். அதற்கு அந்தனன் நான் பல பிரபலங்களை பார்த்துள்ளேன் அதில் அஜித் அவர்களும் ஒருவர் என தெரிவித்துள்ளார். அப்போது பத்திரிகையாளரிடம் அசோக் ஜி அஜித் அரசியலுக்கு கொண்டு வர பிரபல தொழிலதிபர் ஆர்வமாக உள்ளார். கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் செலவு செய்யக் கூட அவர் தயாராக உள்ளார் என கூறியுள்ளார்.

இதனை அஜித் அவரிடம் கூறவேண்டும் என தெரிவித்துள்ளார். அதற்கு பத்திரிக்கையாளர் அஜித் அவர்கள் தனக்கென ஒரு மேனேஜரை வைத்துள்ளார். அவர் தரப்பில் இருந்து வரும் தகவல்களும் வெளி தரப்பிலிருந்து வரும் தகவல்களும் மேனேஜர் மூலமாகத்தான்

அஜித் அவர்களுக்கு சென்றடையும். அதனால் நீங்கள் அஜித்குமாரின் மேனேஜர் சுரேஷ் சந்திரா என்பவரை பாருங்கள். அஜித் அவர்களுக்கு அரசியல் வர ஆசை இருக்கிறதா என்பது தெரியவில்லை என கூறியுள்ளார்.