தயாரிப்பாளரை கரை சேர்த்தாரா அஜித்.. GBU வரவு, செலவு, கணக்கு புள்ளி விவர பட்டியல் இதோ!

Ajith Kumar: அஜித் குமார் நடித்தது கடந்த ஏப்ரல் பத்தாம் தேதி ரிலீஸ் ஆன குட் பேட் அக்லி படம் விமர்சன ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றிருக்கிறது.

இதைத் தாண்டி 200,300 கோடி வசூல் என்று சமூக வலைத்தளங்களிலும் பேசப்படுகிறது. படம் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்தை நெருங்கும் நிலையில் படத்தின் பட்ஜெட் மற்றும் லாபத்தை பற்றி பார்க்கலாம்.

புள்ளி விவர பட்டியல் இதோ!

குட் பேட் அக்லி படத்திற்காக தயாரிப்பாளர் போட்ட பட்ஜெட் 263 கோடி. இதற்கு வாங்கிய கடனுக்காக கட்டப் போகும் வட்டி 50 கோடி.

விளம்பரத்திற்காக செலவு பண்ணியது ஏழு கோடி. ஆக மொத்தம் படத்தின் மொத்த பட்ஜெட் 320 கோடி. இந்த 320 கோடியில் நடிகர்களுக்கு கொடுத்த சம்பளம் மட்டுமே 197. 65 கோடி.

அஜித்தின் சம்பளம் 163 கோடி, இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சம்பளம் 10 கோடி, த்ரிஷாவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 4 கோடி, ஜாக்கி ஷரஃப் வாங்கிய சம்பளம் ரெண்டு கோடி.

அர்ஜுன் தாஸ், பிரசன்னா மற்றும் தெலுங்கு நடிகர் சுனிலுக்கு தலா ஒரு கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷுக்கு 3.50 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் முன்பு இசையமைப்பாளராக புக்காகி இருந்த தேவி ஸ்ரீ பிரசாத்துக்கு ரெண்டு கோடி அட்வான்ஸ் ஆக கொடுக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சில பிரச்சினையால் அவர் படத்தில் இருந்து விலகி இருந்தாலும் அந்த அட்வான்ஸ் பணம் திரும்ப பெறப்படவில்லை.

ஒளிப்பதிவாளருக்கு 1.25 கோடி சம்பளம், பணத்தின் எடிட்டருக்கு 40 லட்சம் என மொத்தம் 197.65 கோடி பட குழுவுக்கு சம்பளமாகவே செலவாகி இருக்கிறது.

ஆக மொத்தம் குட் பேட் அக்லி படத்தை எடுப்பதற்கு மட்டும் ஆன செலவு 65.35 கோடி. இதில் தமிழ்நாடு, கர்நாடகா கேரளா போன்ற இடங்களில் தியேட்டர் ரிலீஸ் 72 கோடி வரவு வந்திருக்கிறது.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் நாலு கோடியும், ஹிந்தியில் 22 கோடியும், ஓவர்சீஸ் வரவு 19 கோடியுமாக இருக்கிறது. இசை உரிமை மட்டும் பத்து கோடிக்கு விற்பனையாகி இருக்கிறது.

சாட்டிலைட் உரிமை 32 கோடி, டிஜிட்டல் உரிமை netflix நிறுவனத்திற்கு 95 கோடிக்கும் விற்கப்பட்டிருக்கிறது.

ஆக மொத்தம் வரவு கணக்கு 254 கோடியாக இருக்க படத்தின் தயாரிப்பாளருக்கு 66 கோடி நஷ்டமாக இருப்பதாக வலைப்பேச்சு சேனலில் சொல்லப்பட்டு இருக்கிறது.