1. Home
  2. கோலிவுட்

24 வருடங்களை நிறைவு செய்த அஜித், ஷாலினி.. இணையத்தில் வைரலாகும் திருமண நாள் புகைப்படங்கள்

24 வருடங்களை நிறைவு செய்த அஜித், ஷாலினி.. இணையத்தில் வைரலாகும் திருமண நாள் புகைப்படங்கள்

Ajith : அஜித் மற்றும் ஷாலினி இருவரும் அமர்க்களம் படத்தின் மூலம் காதலித்து கடந்த 2000 ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு அனோஷ்கா மற்றும் ஆத்விக்கு என்ற குழந்தைகள் உள்ளனர். குறிப்பாக ஆதிக் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்து வருகிறார்.

நட்சத்திர ஜோடிகளாக இருக்கும் அஜித் மற்றும் ஷாலினி இருவரும் இன்று தங்களது 24 ஆவது திருமண விழாவை கொண்டாடுகிறார்கள். சமீப காலமாகவே அஜித் மற்றும் ஷாலினி இருவரின் ரொமான்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கிறது.

பைவ் ஸ்டார் ஹோட்டலில் திருமண விழாவை கொண்டாடிய அஜித், ஷாலினி

24 வருடங்களை நிறைவு செய்த அஜித், ஷாலினி.. இணையத்தில் வைரலாகும் திருமண நாள் புகைப்படங்கள்
ajith-shalini

அந்த வகையில் சென்னையில் உள்ள பிரபல பைவ் ஸ்டார் ஹோட்டலான லீலா பேலஸில் தங்களது திருமண நாளை கொண்டாடி உள்ளனர் அஜித், ஷாலினி. அவர்கள் எடுத்துக் கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். இதே மகிழ்ச்சியுடன் பல வருடம் இருவரும் இணைந்து வாழ வேண்டும் என்றும் கமெண்ட் செய்துள்ளனர். இந்நிலையில் வருகின்ற மே 1 அஜித்தின் பிறந்தநாள் வரவுள்ளது.

24 ஆவது திருமண விழாவை கொண்டாடிய ஷாலினி அஜித்

24 வருடங்களை நிறைவு செய்த அஜித், ஷாலினி.. இணையத்தில் வைரலாகும் திருமண நாள் புகைப்படங்கள்
ajith-shalini

இப்போதே இதற்காக அஜித் ரசிகர்கள் ஆரவாரமாக ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் மே ஒன்றாம் தேதி அஜித்துடைய விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.